பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

சொன்னார்களாம். எங்கள் பாரதி, “ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று எண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார். வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்...' என்று பாடினான்.

கல்வியறிவு வேண்டும்

கல்வியறிவில்லாதவர்களைக் குறைவாகப் பேசியவர் திருவள்ளுவர் மாதிரி வேறு யாருமில்லை, விலங்கொடு மக்கள் அனையர்...!" எவ்வளவு குறைவாகப் பேசுகின்றார். 'இலங்கு நூல்கற்றாரோடு ஏனையர்...! கல்வியறிவில்லா தவனைப் பற்றிச் சொல்லும் போது, அவனை விலங்கு என்றார் வள்ளுவர், விலங்கு என்றால் மிருகம் என்று அர்த்தம். மாடு என்றும் அர்த்தம். ஏன்? அது சொன்னால் கேட்காது. மிருகங்களின் குணம் அது.

நமது மாடு ஒன்று தெருவில் வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த மாட்டைப் பார்த்து, "நான் வீட்டுக்குப் போகிறேன். என் பின்னாலேயேவா..." என்றால் வருமா? என் கூட அது வருவதற்குக் கையில் பச்சைப் புல் வைத்துக் கொண்டு காட்ட வேண்டும்.

நம்ம ஜனநாயக நாட்டிலே அவ்வப்போது தேர்தல் வந்தே தீரும். யாருக்கு வோட்டுப் போட்டாலும் சரி, நாம் மறக்காமல் தானே சென்று வோட்டு போட்டுவிட்டு வந்து விட வேண்டும். ஆனால், இந்த நாட்டிலே இன்னும் இந்த எண்ணம் வரவில்லையே! "வோட்டுப் போடறதுக்கு வாங்க என்றாலும் வரமாட்டார்கள்.

"விலங்கொடு மக்கள் அணையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்"

என்று எத்தனை அருமையாகச் சொல்லியிருக்கிறார் வள்ளுவர்.