பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

அவயவங்கள் உன்னிடமே இருக்கின்றன. கண், மூக்கு, காதெல்லாம் இருக்கின்றன... எப்படிப்பட்டவை இவை?

'ஓர ஒட்டார் ஒன்றை உன்ன ஓட்டார் மலரிட்டு உன் தாள் சேர ஒட்டார் ஐவர்...

"கண், காது, மூக்கு, வாய், மெய் என்ற இந்த ஐந்து" பொறிகளும் என் உயிரை வாங்குகின்றனவே... என்று பாடினார் அருணகிரிநாதர்.

நாம் வாழ்வது எதற்கு?

மனிதனுக்கு இருக்க வேண்டிய உயர்ந்த பண்பாடு நன்றி தான். ஏ... மனிதனே...! மண்ணும், நிலமும், நீரும், காற்றும், வானும் ஆகிய பஞ்ச பூதங்களும் இந்த உலகத்திலே உன்னைப் பெற்றெடுத்துக் காத்து வளர்த்து வருகின்றன. இந்தச் சமுதாயத்துக்கும், இந்த உலகத்துக்கும் நீ நன்றியுள்ளவனாக கடமைகளை ஆற்ற வேண்டும் என்று சொல்வதற்காகத்தான் பெரிய பெரிய மேதைகளெல்லாம். நமக்குப் பல அரிய பெரிய செய்திகளை எழுதி வைத்திருக்கிறார்கள்.

அவற்றை இலக்கியம் என்று அழைக்கிறோம். காவியங்கள் என்று அழைக்கிறோம் . பலவிதமான பெயர்களைச் சொல்லி அந்த நூல்களையெல்லாம் தாம் அழைக்கிறோம். அவற்றின் அடிப்படை நோக்கமெல்லாம், “ஏ மனிதனே!... இந்தப் பூமியிலே நீ இனாமாக வாழ்ந்துவிட்டுப் போகக்கூடாது என்பது தான்.

இந்த மண்ணுக்கும் இந்தச் சமுதாயத்துக்கும் நீ செய்ய - வேண்டிய கடமையைச் செய்ய வேண்டும். நீ நன்றியுள்ளவனாக இருக்க வேண்டும். ஏனென்றால், இந்தத் தேசமும்,