பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

இராமலிங்க சுவாமிகள் ஆறாயிரம் பாடல்கள் பாடினார், எதற்கு? "ஏ! மனிதனே! பசியாயிருப்பவனுக்கு ஒருவேளை சோறு போடு. உனக்கு அறிவு இருக்கிறது. நீ . பிறருக்கு உதவ வேண்டும். ஏன் உதவ வேண்டும் என்றால் அதுதான் மனிதத் தன்மை, மனிதப் பண்பாடு... இதைச் சொல்வதற்கு ஆறாயிரம் பாடல்கள் பாடினார்.

மனிதத் தன்மை

‘‘மனிதனாகப் பிறந்தவர்கள் எல்லோரும் மனிதத் தன்மையோடு வாழவேண்டும் என்பதைத்தான் அறிஞர்கள் அனைவரும் இரண்டாயிரம், மூவாயிரம் வருடங்களாக நமக்குச் சொல்லிக்கொண்டு வருகிறார்கள், நமக்குக் கதை சொல்வதற்காக, அவர்கள் வரவில்லை. திருவள்ளுவர் -எதற்குத் தோன்றினார்? நக்கீரர் எதற்கு வந்தார்? இராமலிங்க சுவாமிகள் ஏன் அவதரித்தார்? பட்டினத்தார் எதற்குப் பிறந்தார்? தாயுமான சுவாமிகள் ஏன் வந்தார்? பெரிய பெரிய ஞானிகளும் மகான்களும் ஏன் எதற்காக இங்கே பிறந்து, எதற்காகப் பாடினார்கள்? நமக்கு என்ன வேலைக்குப் போகத் தெரியாதா? தாயுமான சுவாமியைக் கேட்டுக் கொண்டா வேலையில் சேர்ந்தோம்!

முதன்மையான கருத்தென்ன?

வீடு கட்டத் தெரியாதா நமக்கு? பட்டினத்தாரைக் கேட்டுக் கொண்டா வீடு கட்டுகிறோம்? நமக்கென்ன கல்யாணம் பண்ணிக் கொண்டு, பிள்ளைகள் பெற்று வாழத் தெரியாதா? திருவள்ளுவரைக் கேட்டுக் கொண்டா பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறோம்? பின்னர் எதற்காகத் தான் இவர்கள் வந்தார்கள்? நமக்குத் தெரியாத எதையாவது சொல்லத்தானே இவர்கள் வரவேண்டும்! நாம் தான் எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறோமே... இவர்கள் எதற்கு வந்தார்கள் என்றால், நமக்குப் பிறந்து, வளர்ந்து, படிக்கத் தெரியும். .....உத்தியோகத்துக்குப்