பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

இல்வாழ்க்கை

இல்லறம் என்று சொன்னார் வள்ளுவர்: குடும்பத்தில் இருந்து அறம் செய்தல்.... அறம் என்பதைத் தனியாகச் செய்ய முடியாது. அதற்குத் துணையாக ஒரு பெண் வேண்டும். அவளோடு சேர்ந்து ஆற்றும் அறம் தான் இல்லறம்...

சீதை பத்து மாதம் இலங்கையிலிருந்தாள். “நான் தனியாக இருக்கிறேன்... எனக்கிருக்கும் கவலையெல்லாம் நாலு பெரியவர்கள், நல்லவர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்கு ஒரு விருந்து அளிக்கும் வாய்ப்பில்லாமல் போனேன்... என் கணவர் தனியாக இருந்து என்ன செய்வார்? என்று எண்ணித்தான் சீதை வருத்தப்பட்டாளாம். இது தான் இல்லறம்.

கண்ணகி

கண்ணகியைப் பிரிந்து கோவலன் மாதவியிடம் பன்னிரண்டு ஆண்டுகள் மயங்கிக் கிடந்தான். திரும்பி திருந்தி வந்து கண்ணகியிடம், 'தெரியாமல் செய்து விட்டேன்' என்று மன்னிப்புக் கேட்டான். அப்போது கண்ணகி என்ன சொன்னாள்?

"அறவோர்க்களித்தலும், அந்தணரோம்பலும். துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை ... என்று தான் கண்ணகி அழுதாளே தவிர, "என்னை விட்டு விட்டுப் போய்விட்டீர்களே" ன்னு அவள் துன்பப்படவில்லை!

இராமலிங்க சுவாமிகளுக்குக் குடும்பம் கிடையாது. ஆனால் இல்லறத்தைப் பாராட்டிப் பேசுகிறார் அவர், "இறைவா எனக்கு உபதேசம் செய்தாய்... என்னை நீ அழைத்துக் கொண்டு போகவில்லை... இது எப்படியிருக்கிறதென்றால் திருமணம் செய்து கொண்ட ஒருவன் அந்தப்