பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

"கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்" (கு.1078) என்று கூறுகிறார்.

கீழ்மையான குணம் படைத்த மக்கள் பயனுள்ள வாழ்வினை மேற்கொள்ளவே மாட்டார்கள்.

மனிதனுக்குச் சிறப்பாக இருப்பது அறிவுதான் என்றாலும் மக்கட் பிறவி எடுத்த அனைவருக்குமே அறிவு இருக்க வேண்டும் என்று சட்டம் கிடையாது. சிலருக்கு அறிவு இருக்கும். பலருக்கு இருக்காது. அறிவு இல்லாதவர்கள் வருத்தப்படக் கூடாது. நமக்கு எத்தனையோ இல்லை---அதுபோல் இதுவும் இல்லை என்று ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டும்!

வருத்தம் கூடாது

சிலர் பேசுகிறபொழுது, மற்றவரைப் பார்த்து, “உனக்கு அறிவு இருக்கிறதா?" என்று கேட்பார்கள். அதைக் கேட்டவுடன் மற்றவர் வருத்தப்பட்டுக் கொள்வார். அப்படிச் சொல்பவர்களைப் பார்த்து வருத்தப்பட்டுக் கொள்ளக் கூடாது.

இருந்தால் இருக்கிறது என்று சொல்லலாம், இல்லை. என்றால், எங்கட்கு எல்லாம் 'அது' கிடையாது என்று சொல்லலாம். அதனால் ஒன்றும் குடி முழுகிப் போகாது. உலகத்தில் வாழ்வதற்கு அறிவு தேவையா என்பது நன்கு ஆராய்ந்து புரிந்துகொள்ளவேண்டும்.

உலகில் வாழ்பவர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, அறிவு கொண்டு வாழ்வது; மற்றொன்று, பழக்கத்தினால் வாழ்வது.

..

. ... அறிவினைக் கொண்டு வாழ்கிறவர்கள் வாழ்க்கையில் புதுமைகளைச் சொல்லுவார்கள். புதினங்கள் கண்டு பிடிப்பார்கள்... எல்லோரும் இன்புற்று பயன்படுமாறு வாழ்ந்து காட்டுவார்கள். -