பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

171

ஒருவர் இறந்து போனால்கூட பெண்கள் பாட்டுத்தான் பாடுகிறார்கள். அதை ஒப்பாரி என்று சொல்கிறார்கள். ஒப்பாரியைக் கேட்டு விட்டுத்தான் இறந்து போன பிணம் கூடப் புறப்பட்டுப் போகிறது என்பார்கள். குழந்தைகளைத் தூங்கச் செய்யும் தாலாட்டிலும் பெண்கள் சங்கீதத்தைச் சேர்த்திருக்கிறார்கள்.

இயல்பாகவே பெண்களுக்கு இந்த இசைஞானம் இருக்கிறது என்பதற்கு இதெல்லாம் பழக்கத்திலேதெரிந்துகொள்கிற அடையாளங்கள் தான்; ஓடுகிற தண்ணீரிலேயும் ஆடுகின்ற இலைகளிலேயும் சங்கீதத்தைக் கண்டவன் தமிழன் என்றெல்லாம் பெருமையாகச் சொல்லுவார்கள்.

படம் திறத்தல்

சாதாரணமாக நாட்டிலே நாம் காணும் இன்னொரு பழக்கத்தைச் சொல்லுகிறேன். ஒரு பெரியவர் நல்ல காரியத்தைச் செய்திருந்தால், தான தருமங்கள் செய்திருந்தால், கல்வியறிவிலே சிறந்தவராக இருந்திருந்தால் அல்லது தெய் வீகத் துறையிலேயும் இலக்கியத் துறையிலேயும் பொருளா தாரத் துறையிலும் சமூகத் துறையிலும் நல்ல காரியங்களைச் செய்திருந்தால், அவருடைய உருவப் படத்தைத் திறந்து வைக்கிறார்கள்.

ஒரு தகப்பனார் தன் பிள்னளகள்மீது பிரியமாயிருக்கிறார். நான் ஒரு தகப்பனாரிடம் 'நீங்கள் ஏன் உங்க பையனிடம் பிரியமாயிருக்கிறீர்கள்? என்று கேட்டேன். “அவன் என் பிள்ளை'ன்னு சொன்னார், “உங்க பிள்ளைன்னு தான் எனக்குத் தெரியுமே, ஏன் பிரியமா இருக்கிறீங்க? என்று மறுபடியும் கேட்டேன். உடனே அவருக்குக் கோபம் வந்து என்னை ஒரு முறை முறைத்து விட்டு, "சரி தான் போங்க" ன்னு சொல்லிவிட்டுப் போய்விட்டார். அவருக்கு அந்தக் காரணத்தைச் சொல்லத் தெரியவில்லை.