பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

173

யடைதல் இயல்பு. சிலருடைய உருவம் 'போட்டோ பேப்பரிலே' வந்துவிடும். உடனே அவரே, 'என் போட்டோ பேப்பர்ல வந்திருக்குதே பார்த்தீங்களா?' என்று வருபவர்களிடமெல்லாம் பத்திரிகையைக் காட்டிக் கொண்டிருப்பார்.

ஆனால் நாம் எடுத்துக் கொள்கிற புகைப்படமும் அல்லது திறந்து வைக்கிற உருவப் படமும் போட்டோவும் பேசாது; வளராது; அதற்கு உயிரில்லை. ஆனால் பேசக் கூடியதும், வளரக்கூடியதும் உயிருள்ளதும் ஆன போட்டோ இருக்கிறதே அதற்குத்தான் பிள்ளை என்று பெயர். அதனால் தான் தகப்பன் தன் பிள்ளையைக் கண்டு , மகிழ்ச்சியடைகிறான். அவன் மீது பிரியமாயிருக்கிறான், ஏன்? இவன் உருவத்தினையே முகத்தையே இன்னொரு உ.பீராக அங்கே பார்க்கிறான்.

சில தாய்மார்கள் பிறந்த குழந்தையைப் பார்த்து, "இந்தப் பையன் அப்படியே அப்பனை உரிச்சு வச்சிருக்கு" என்பார்கள். அதற்குத்தான் குறைவாக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள் போலிருக்கிறது.


நல்ல காலம்

நல்ல காலம் என்ற சொற்கள்---எல்லோரையும் மகிழ் விக்கக்கூடிய சொற்களாகும், 'நல்ல காலம் வந்துவிட்டது' என்று சொன்னால், அது மனிதனுக்கு எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்பது அனுபவம் உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஏன் இந்த மகிழ்ச்சி உண்டாகிறது என்றால் மனித வாழ்க்கையே காலத்தின் அடிப்படையில் தான் அமைந்திருக்கிறது.

காலம் என்பது தான் எல்லாவற்றிற்கும் அடிப்படையானது என்பதை திருவள்ளுவர் சொல்கிறபொழுது