பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

183

முட்டிக்கொள்வார்களாம். குண்டுச்சட்டி, எத்தனை பெரிது! அதிலே கை நுழையாமல் சட்டியின் அடிபாகத்தில் கையை விட்டு அங்கேயுள்ள கரியை முகத்தில் பூசிக் கொள்வார்களாம், கோபம் மனிதனை அந்த அளவுக்கு முட்டாள் ஆக்கிவிடுகிறது.

மனிதனை மிருகமாக்குவது கோபம் தான்.... சில பேர் பேசுகிறபோது சொல்வார்களே', 'எனக்குக் கோபம் வந்துட்டா நான் மனிதன் இல்லை' என்று... அதனால், 'நான் மாடு, மிருகம்' என்று அவனே ஒத்துக்கொள்வதாகத் தானே அர்த்தம்...?

மனிதனுக்குக் குணம் இல்லை என்றால், அவன் மிருகம் தானே? அதனாலே, ஒரு மனிதனை அறிமுகப்படுத்துகிற போது, அவன் படிப்பு, அவன் - அறிவு, அவன் பட்..டம்.. இதையெல்லாம் சொல்லி அறிமுகப்படுத்துவதைவிட, அவன் குணத்தைச் சொல்லி அறிமுகப்படுத்துகிற பழக்கம் ஏற்படவேண்டும் என்று நினைக்கிறேன்.

அறிமுகம் "இவர் நல்லவர்...பண்புள்ளவர்...ஒழுக்கம் உள்ளவர், - அன்பு உள்ளவர், விசுவாசம் உள்ளவர், பிறருக்கு உதவுவார்" என்று அவன் பண்பைச் சொல்லி அறிமுகப் படுத்துகிற பழக்கம் இந்த நாட்டில் வரவேண்டும், ஏனென்றால் படித்தவனாக இருப்பார், குணம் இருக்காது. அறிவாளியாக இருப்பார், ஒழுக்கமிருக்காது. பணக்காரராக இருப்பார், நல்ல எண்ணம் இருக்காது . ஆகையாலே! , 1மனிதனை அறிமுகப்படுத்துகிற பொழுது, அவன் குணத்தைச் சொல்ல வேண்டும்.

அவன் எடையைச் சொல்லி அறிமுகப்படுத்தக், கூடாது. 'இவர் முந்நூறு பவுண்டு' எடை. இவரிடம் நீங்கள் தாராளமா 'சிநேகம் பண்ணலாம்.' என்று யாராவது