பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

சொல்வார்களா? 'இவர் நிதானமா நடந்து போவார். ஒட மாட்டார்' என்றா அறிமுகப்படுத்துவார்கள், முந்நூறு பவுண்டு ஆச்சே...எப்படி. ஓடுவான்! எடையைச் சொல்லி அறிமுகம் செய்ய வேண்டியவை மிருகங்கள். 'இந்த ஆடு நாற்பது கிலோ' என்று சொன்னால் வாங்குவான்!

தாழ்ந்த பிறவிகள்

கோழியின் பண்பைச் சொல்லி யாராவது அறிமுகப் படுத்துவார்களா? 'இது பண்புள்ள கோழி. பக்கத்து வீட்டுக்குப் போகாது. போனாலும் வராது. காரணம் பக்கத்து வீட்லே ஒரு 'பண்பாளன்' இருக்கிறான்!' என்று யாராவது சொல்வார்களா?

நல்ல எண்ணங்கள், நல்ல குணம், நல்ல மனம் இவற்றைப் பெற்று மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். பலரோடு கலந்து பேசி, சிரித்து மகிழவில்லையென்றால் அது என்ன மனித வாழ்க்கை ? சிலர் வெட்கமில்லாமல் சொல்வார்கள். எனக்கு இந்த ஊர்ல யாரையுமே தெரியாது... என்னையும் யாருக்கும் தெரியாது... 'போலீஸ் ஸ்டேஷனுக்கு' மட்டும்தான் தெரியும் என்றால் இது மனித வாழ்க்கையா?

இன்னும் சில பேர், *எனக்கு அக்கம்பக்கத்திலே குடியிருக்கிறவர்கள். யார் என்றுகூடத் தெரியாது. நான் உ.ண்டு, என் வேலையுண்டு என்று இருப்பேன்' என்பார்கள். இவர்களையெல்லாம் பஞ்சாயத்து' 'முனிசிபாலிட்டி' “கார்ப்பரேஷன்' எல்லைக்குள் குடியிருக்கவே விடக் கூடாது!

இதுதான் வாழ்க்கை

சமுதாயத்துக்கு, மண்ணுக்கு, மொழிக்கு, மக்களுக்கு நம்மாலானதைச் செய்யவேண்டும்.. 'கலகலவென்று பிறரிடத்திலே பேசிப் பழக வேண்டும். சிரித்து மகிழ