பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

185

வேண்டும். அதற்காகத்தானே நிறைய மன்றங்கள் வைக்கிறோம். கழகங்கள் வைக்கிறோம், சங்கங்கள் வைக்கிறோம்...ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழத்தானே இவையெல்லாம். அழுவதற்கு மன்றம், சங்கம் எல்லாம் தேவையில்லையே! அழுவதற்கு ஒரு ஆள் போதும். ஒருவன் தனியாக அழுதுகொண்டே போகும்போது எவனும், "நீ எப்படி மன்றம் வைக்காமல் அழுதுகொண்டு போகலாம்?’ என்று கேட்க மாட்டான்.

வேறுபாடு

சிரிப்பதற்கும் அழுவதற்கும் என்ன வித்தியாசம்? சிரிப்பதற்கு நேரம் உண்டு, அளவு உண்டு. அழுவதற்கு நேரம், அளவு கிடையாது. ஒரு நாள் முழுவதும் ஒருத்தன் அழலாம். ஒரு பெண் ஒரு நாளெல்லாம் அழலாம். தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கலாம். அளவு கிடையாது. ஆனால், சிரிப்பதற்கு அளவு உண்டு.

கொஞ்ச நேரம் சிரித்துவிட்டு நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒரு நாள் முழுதும் ஒருத்தன் சிரித்துக் கொண்டே இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் அவன் மேல் எல்லாரும் சந்தேகப்படுவார்கள். நாள் முழுக்க ஒருவன் அழுதுகொண்டே இருந்தால் சந்தேகப்பட மாட்டார்கள். தனியாக அழலாம்; தனியாகச் சிரித்தால் சந்தேகப்படுவார்கள். எனவேதான் சிரிப்பதற்குப் பல பேர் வேண்டும்.

குறட்பா

'நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும் பாற்பட்டன்று இருள்’ என்பார் திருவள்ளுவர். அதாவது பலரோடும் பேசி, சிரித்து, மனம்விட்டுப் பழகி வாழ முடியாதவர்களுக்கு வாழ மறந்தவர்களுக்கு இந்த உலகம்