பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

187

கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நாம் ஆடு, மாடுகளை அழைப்பதில்லை!

மக்கள் யார்

மனிதனாகப் பிறந்தவர்களையெல்லாம் மனிதர்களாகக் கருதிவிட முடியாது. மனிதப் பிறவி எடுத்தவர்கள் பலர் மிருகங்களைப் போலவே வாழ்ந்து வருகிறார்கள். ஒரு சமயம் எனக்கு மிகவும் வேண்டிய நண்பரின் கடையில் நான் உட்கார்ந்திருந்தபோது 'காபி சாப்பிடுங்கள்' என்று சொன்னார். 'சரி' என்று தலையை ஆட்டினேன். உடனே காபி வாங்கிக் கொண்டு வருவதற்கு அவருடைய வேலையாள் அங்கே காணப்படவில்லை.

எதிரில் உட்கார்ந்திருந்த அவரது கணக்கப் பிள்ளையைப் பார்த்து, 'அந்த எருமையைக் கூப்பிடுங்கள்' என்றார். உடனே கணக்கப் பிள்ளை பின்பக்கம் பார்த்துக் கைதட்டிக் கூப்பிட்டார். 'என்ன? எருமையை இப்படிக் கூப்பிடுகிறாரே' என்று நினைத்தேன். ஓர் ஆள் வந்து நின்றான், பிறகு அந்த எருமை தான் எனக்கு காபி வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தது! பிறகு நான் செல்வதற்கு அந்த எருமை தான் வண்டி கொண்டு வந்தது. நான் உட்கார்ந்தவுடன் என்னைப் பார்த்து, 'ஐயா அடிக்கடி வரவேண்டும்' என்று அது சொன்னவுடன் நான் புறப்பட்டேன். அவனுடைய : தாயார் எருமையையா பெற்றாள்? மனிதக் குழந்தையைப் பெற்றாள். அவன் எருமையாக மாறி விட்டான்!

பெயர்க் காரணம்

ஒருவனைப் பற்றி அவனுடைய தாய் தகப்பனார் வைத்த பெயரைக் கொண்டு மதிப்பிடக்கூடாது. தாய், தந்தையர் பிரியத்திலே பெயர் வைக்கிறார்கள். பலர் தெய்வத்தின் பெயர்களையே வைப்பார்கள். ஒருவனுக்கு ஊரார் இருப்பவர்கள். என்ன பெயர் வைக்கிறார்கள் என்று ,