பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

இப்பிறவியில் செய்யப்படும் செயல்களாகிய வினைப் பயன்கள் வருகின்ற பிறவிகளில் அனுபவிக்க வேண்டியவைகளாக இருக்கும். அவைகட்கு வருவினை என்று பெயர்.

இந்தப் பிறவியில் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற வினைப்பயன் கட்கு ' நிகழ்வினை' என்று பெயர். இதனை, வடமொழியில் பிராரத்வம்' என்று கூறுவர்.

இந்தப் பிறவியில் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற வினைப் பயன்களை உலக வழக்கில், துன்பப்படுகின்ற ஒருவரைப் பார்த்து--- 'அது அவனுடைய பிராப்தம்' என்று நடைமுறைப் பேச்சில் சொல்வார்கள். இந்த வினையின் நுட்பம் என்னவென்றால் யாராக இருந்தாலும் இந்த வினையினை அனுபவித்தே தீர வேண்டும். இது யாரையும் தப்பிக்க வைக்காது. தியான முயற்சிகளினால் பிராரத்வ . வினையின் வேகத்தினைச் சிறிதளவு குறைப்பதற்கு முயற்சிக்கலாம். அவ்வளவு தான்.

மற்ற இரு வினைகள்

எச்சவினை---வருவினை என்கிற இருவினைகளும் ஆன்மீக சக்திகளால் இல்லாமல் செய்ய முடியும். தியானப் பயிற்சியினாலும் குருமார்களின் பார்வையினாலும் ஆகாமியம்---சஞ்சிதம் என்று சொல்லப்படுகின்ற எச்சவினை --வருவினைகள் மறைந்து விடுவன ஆகும்.

குரு உபதேசம் பெற்ற ஒருவன் தன்னை நன்றாகப் பக்குவப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். குருநாதரிடம் உபதேசம் பெறுகின்ற முறையினைப் பெரியவர்கள் நல்ல உதாரணங்களினால் விளக்கம் - செய்வார்கள்.

நெருப்பு உண்டாக்கப்படுகின்ற அடுப்பினைத் தேடி வைத்துக் கொள்ள வேண்டியது நம் கடமை, நெருப்பினை உண்டாக்க வேண்டுவதும் நம் கடமையாகும். பாத்திரத்தை