பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

வேக வைத்து விடக்கூடாது. அப்படிச் செய்து விட்டால் அந்த நெல்லை பிறகு காயவைத்து அரிசியாக அறைக்க முடியாது.

நெல் அவித்தல்

ஒரு ஆவி வந்தவுடன், நெல்லை எடுத்துக் காய வைப்பார்கள். காய்ந்த பிறகு அரிசி ஆக்கிவிடுவார்கள்..அளவோடு ஆவி வந்தபின் எடுத்து விடுவதைத் தான் அவித்தல் என்று சொன்னார்கள். அவித்த நெல் பிறகு , முளைக்காது. விதையாக விதைக்க முடியாது.

பொறிகளை அவித்தல் என்பது, அவைகள் குறும்பு செய்யாமல் பார்த்துக் கொள்வதாகும். அதனைத்தான் “ஐந்தவித்தல்' என்று ஆசிரியர் திருவள்ளுவர் குறிப்பிட்டுக் காட்டினார்கள், சிறிது வேக்காடு காட்டி எடுத்துவிட வேண்டும் என்று பேசுவோரைக் கேட்கின்றோம்.

அதுவே போன்று, தியானப் பயிற்சிகளால் ஐந்து பொறிகளுக்கும் வேக்காடு காட்டி, அடக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

தியானம் செய்யச் செய்ய ஐந்து பொறிகளும் பக்குவத்திற்கு வந்து விடும் என்று அறிய வேண்டும்.

தியானப் பயிற்சியினால் ஐம்பொறிகளும் அடக்கப்பட்டு, உள்ளமாகிய மனம் தூய்மைப்படுத்தப்பட்டு இறைவன் காட்சி புலப்படும் என்ற உண்மையினை உணர்ந்து கொள்ள வேண்டும். குரு வடிவமாய் இறைவன் வந்து, அனைத்தையும் அருளிச் செய்வார்.

வடலூரார் வாக்கு

'அருட்பெருஞ்சோதி ---- தனிப்பெருங்கருணை' என்ற மூல மந்திரத்தைத் தந்த திருவருட் பிரசாக வள்ளலார் நாம் அறிந்து உணரும் பொருட்டு இறைவன் தனக்கு