பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

மகான்களின் சொற்களில் புதிய உணர்ச்சிகள் வந்து கொண்டே இருக்கும். பழக்கத்தில் பேசுகின்ற போது, பெரியவர்கள் ஒரு பழமொழி சொல்வார்கள். "அகல உழுவதைவிட ஆழ உழு என்பதாகும்.

ஆழமாக உழுது விதைகள் போட்டால் வளர்கின்ற பொழுது அவைகள் சடைசடையாக் காய்த்துக் காட்சி தரும். பூமியை ஆழமாக உழுது பயிரிடுவதால் மிக நல்ல பயன் கிட்டுவதாகும். அகலமாக உழுது விட்டேன் என்று சொல்லி 10 ஏக்கர் நிலத்தில் மேலெழுந்தவாரியாக மண்ணைக் கிளறி விதைகளைப் போட்டு விட்டால் விளைச்சலே இல்லாமலும் போகலாம்.

அதிகமான நிலத்தில் பயிரிட்டேன் என்று சொல்லிக் கொள்ளலாம். விளைச்சல் இருக்காது, பறவைகளும் விதைகளைக் கொத்தித் தின்றுவிட்டுப் போகலாம். .ஆதலால்தான் நன்றாகப் பயன் அடைய வேண்டும் என்றால் ஆழமாக உழுது விதை விதைத்தல் வேண்டும்.

திருவள்ளுவர், திருவருட்பிரகாச வள்ளலார், தேவாரம், திருவாசகம் முதலிய நூல்களைப் படிக்கின்ற பொழுது, ஒவ்வொரு கருத்துக்களையும் பலமணி நேரம் சிந்தித்து அறிதல் வேண்டும். விரைந்து விரைந்து படிக்கக் கூடாது. இப்படிப்பட்ட நூல்களைப் படிப்பது தான் ஆழ உழுதல்" என்பதைக் குறிப்பதாகும்.

நாள்தோறும் - காலையில் செய்தித் தாள்களைப் .படிப்பதை அகல உழுதல் என்று சொல்லிக்கொள்ளலாம். பத்திரிகைகளை அகலமாக விரித்துப் படிக்கின்றோம். ஒரு முறை. படித்தாலே நாம் செய்திகளைப் புரிந்துகொள்ள முடியும்.

ஞானவான்கள் அருளிய நூல்களைப் படிக்கவும், சிந்திக்கவும், செய்தல் வேண்டும். நிலைத்து நிற்கின்ற நூல்களுக்கு ஞான நூல்கள் என்பது பொருளாகும்.