பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

 எழுதிக் கொடுக்க இயலவில்லை . ஆதலால், அவர்கள் என்னிடம், “நீங்கள் உங்கள் பாணியிலேயே பேசுங்கள். நாங்கள் பதிவு செய்து கொள்கிறோம்" என்று சொல்லி அவ்வாறே செய்தார்கள். எனக்கும் எளிதான வேலையாக முடிந்தது.

அந்தப் பத்திரிகையில் வந்த கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. எனவே சொற்களில் "நடைமுறைபாணி" என்கிற பழக்கமான முறை இருக்க வேண்டியதாயிற்று.

நான் மிகவும் பாராட்டுகின்ற அரிய பெருந்தகை நண்பர் வானதி திருநாவுக்கரசு ஆவார்கள். அவர்கள் ஒரு புதிய வரலாறு படைத்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். அவர் பதிப்பகம் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் போல் சிறப்பாகக் காட்சியளிப்பது என்று சொல்வதில் பெருமையடைகிறேன். முத்து, முத்தாக அச்சிட்டு முத்தமிழுக்கும் தொண்டாற்றும் மூவேந்தர் அச்சகத்தின் உரிமையாளர் முத்துவுக்கு நன்றி.

அன்புள்ள
திருக்குறளார்