பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

அழுக்கினைத் தேடிப் பார்க்க வேண்டும். அந்த அழுக்கினை--தீய எண்ணங்களை நீக்க வேண்டும்.

அஞ்ஞானம் என்ற இருளினைப் போக்கிட வேண்டும்.

உள்ளமே கோயில்

மனத்தின் நல்ல எண்ணங்கள் குவிந்து கொண்டே இருக்குமாறு செய்துவிட்டால் அந்த உள்ளம் தான் இறைவன் இருக்கும் கோயிலாகவே சொல்லப்படும். அதனால் தான் அடியார்கள் "உள்ளமே கோயில்' என்று சிறப்பாகக் கூறிச் சென்றார்கள். - ' உலகம் போற்றும் பெரிய ஞானியாகிய பட்டினத்தடிகள் 'என்னை அறியாமல் எனக்குள்ளே நீ இருக்க, உன்னை அறியாமல் உடல் இழந்தேன் பூரணமே' என்று வெளிப்படையாகச் சொல்லி வைத்தார்.

எல்லாம் வல்ல பரம்பொருளாகிய இறைவனை வெளியிலே செய்யும் சடங்குகளால் காண முடியாது என்றும், உள்ளத்தின் உள்ளே தேடினால் தான் காண முடியும் என்றும் அந்த முறைதான் 'இறைவன் வழிபாடு' ஆகும் என்றும் சொல்லி வைத்தார்.

"மனத்தகத்து அழுக்கறாத
மவுன ஞான யோகிகள்
வனத்தகத்து இருக்கினும்
மனத்தகத்து அழுக்கறார்
மனத்தகத்து அழுக்கறுத்த
மவுனஞான யோகிகள்
முலைத்தடத்து இருக்கினும்
பிறப்பு அறுத்து இருப்பதே!

"மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி" என்பது இருவள்ளுவர் வாக்காகும். எண்ணம், சிந்தனை, உணர்ச்சி என்பவைகள் எல்லாம் மனத்தில்தானே தோன்றுகின்றன.