பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

மணம் தந்த மலரைக் கண்டுகொண்டார். அவருடைய ஆனந்தத்திற்கு எல்லை உண்டோ!

அதுவே போல், மணமானது மலர்க் காட்சியை காண்பித்தது போல, தியானத்தில் நிலைத்து நிற்கின்ற பொழுது, மென்மையான ஓசை--ஒலி-- காதில் கேட்கும் என்பதாகும். அந்த ஒலியினைக் கேட்டுக் கொண்டே போனால், ஒளிமயமான பேரின்ப காட்சியைக் கண்டு களிக்கச் செய்யும்.

அதனால் தான், இறைவனுக்கு "நாதன்" என்றும் பெயரிட்டு அழைக்கின்றோம், “ஓசை ஒளியெலாம் ஆனாய் நீயே! என்று அருளாளர்கள் பாடிச் சென்றார்கள்.

மணியும் ஒளியும்

திருக்கோயில்களிலே இப்பொழுதுகூட ஒலி, ஒளி நிகழ்ச்சியினைக் கண்டு வருகிறோம். பூசை செய்கின்றவர்கள் மணி அடித்து ஓசை உண்டாக்கிப் பிறகு கற்பூரத்தைக் கொளுத்தி ஒளியைக் காட்டுகிறார்கள். இந்த ஒலியைத்தான் உள்ளத்தின் உள்ளே கேட்கவேண்டும் என்றும், இந்த ஒளியை, உள்ளத்தின் உள்ளே பார்க்க வேண்டும் என்றும் மகான்கள் சொல்லி வைத்தார்கள்.

புகைவண்டி நிலையத்திலும், மணி அடித்த பிறகு. கொடியைக் காட்டுவதும், இந்தக் கருத்தில் தான் இருக்குமோ என்று சிந்திக்க வேண்டி இருக்கிறது!!!

எல்லாவிதமான ஆன்மீக வெற்றிகளுக்கும், அடிப்படையாக இருப்பது, மனத்தினை அடக்குகின்ற வலிமையான பழக்கமே என்பதை இதுகாறும் படித்து வருகிறோம்.

ஒரு மகான் கடைவீதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, ஒரு குரங்காட்டி, ஒரு குரங்கினை வைத்துக்