பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95

அதுவே பெரிய தவம் என்று கூறுகிறார், மீண்டும் மீண்டும் இந்தச் செய்யுளைப் படித்துப் பார்த்தல் வேண்டும்.

வஞ்சனை, பொய், களவு, சூது, சினம் என்கின்ற கொடிய குணங்கள் எல்லாம் ஏனைய தீய குணங்கள் உண்டாவதற்குக் காரணமாக இருப்பவை ஆனபடியால், குறிப்பாக இந்தக் குணங்களை மட்டும் சுட்டிக் காட்டினார். இந்தத் தீய குணங்கள் இல்லாத மனம், ஆண்டவன் வந்து குடி கொண்டிருக்கின்ற இடமாகும்.

நட்டகல்

மிகக் கடுமையாக பாடல் ஒன்று பாடிய சித்தர் "ஏ! மனிதனே! நாதனாகிய இறைவன் மனத்திற்குள் இருக்கின்ற பொழுது, வெளியில் இறைவன் என்று வழிபாடு செய்கிறீர்களே, இந்தப் பழக்கம் எவ்வளவு அறியாமையைக் காட்டுகின்றது" என்பது போன்ற பொருளில் பாடல் ஒன்று இயற்றி இருப்பதைக் காணல் வேண்டும்---

"நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே
சுத்திவந்து மொணமொணவென்று சொல்லும் மந்திரம்

ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்,
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ?"

இந்தப் பாடலினை மிகப் பெரிய சித்தராகிய 'சிவவாக்கியர்' பாடியிருக்கின்றார்.

திருமூலர்

எல்லாம் வல்ல இறைவன் உள்ளத்திலே குடிகொண்டிருக்கிறான் என்ற உண்மையினை இந்த நேரத்திலாவது மக்களிடையே தெளிவுபடுத்த வேண்டியது ஒவ்வொரு :தமிழ் மகனின் கடமையாகும். இல்லை என்றால், மக்களுடைய அறியாமை எல்லையில்லாமல் போய்விடும்.