பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

 ஈடுபட்டிருக்கும் வேலையை மனதார விரும்ப வேண்டும்

இன்னொருவர் குறை சொல்லாத அளவுக்கு வேலையில் ஈடுபாடு காட்டவேண்டும். பாடுபட வேண்டும்.

உலகில் உள்ள எல்லோருக்குமே விரும்பிய வேலைதான் கிடைத் திருக்கிறது என்று நீங்கள் நம்பினால், அது தவறான கருத்தாகும்.

என்றாலும், எல்லோரும் இப்படித்தான் எண்ணி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பெற்ற ஒரு வேலையை பிரியமானதாகக் கருத வேண்டும்.

பெருமையாக நினைக்க வேண்டும்! பேரன்புடன் அதில் ஈடுபட வேண்டும்! நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும்!

'செய்யும் தொழிலே தெய்வம் என்பது எத்தனை உண்மை. உண்மையான உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.

உரியகாலத்தில் உங்களுக்கும் புகழ்வரும், பொருள் வரும். எதிர்பார்க்காத எல்லா இன்பமும் கைகூடும்!

அதுவரை, ஏற்றிருக்கும் தொழிலை உண்மையுடன் செய்யப் பழகுவோம்.

வேறு வேலைதான் வேண்டும் என்றால், அதுவரை காத்திருக்க வேண்டும். வேறு வழியே இல்லை.

இன்றைக்கு செய்யும் தொழிலில் மதிப்பு வைத்து, செயற்கரிய செய்வோம். அதுவே சிறந்தவர்களின் செயலாகும்.