பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 5. விதைத்தது உதைக்கிறது! 'இன்று என்ன நடக்குமோ, எப்படி முடியுமோ என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தார் கல்யாணராமன். தினந்தினம் வீட்டில் நடக்கும் திருவிழாதான் இது, இன்று அது உச்சக் கட்டத்திற்குப் போய் விட்டது என்பதையும் உணர்ந்திருந்தார் அவர். 2 4 கல்யாணராமனின் மகன், ஒரே மகன் , அந்த நகரத்திலே புகழ் பெற்ற வக்கீல் ஆவார். அவர் பெயரைக் கேட்டவுடனேயே மற்ற வக்கீல்கள் எழுந்து நிற்கும் அளவுக்குத் தொழில் நுணுக்கமும், அறிவாழமும் நிறைந்தவர். பரசுராமன் என்ற பெயர் கொண்டவர். வெளியிலே தான் பேரும் புகழும் கொண்டவர் என்றாலும், வீட்டிற்குள் வந்தால் மனைவியிடம் பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போய்விடுவார். அதற்கான காரணத்தை அவரிடம் யார் போய் கேட்பது? மனைவிக்கு அடங்கிய மனிதன் என்பதற்காக அவரது வேலைக்காரர்கள் ஒளிந்திருந்து பேசிக் கொள்வார்கள். வேடிக்கையாகப் பல கதைகளையும் கூறுவார்கள். கோர்ட்டில் இவர் வக்கீலாக வாதாடிவிட்டு, வீட்டுக்கு வந்தால், பரசுராமனின் மனைவி பவானி, கோர்ட் டையே வீட்டுக்குக் கூட்டி வந்ததுபோல கூச்சல் போடத் தொடங்கி விடுவாள். அமைதியாகக் கேட்கும் நீதிபதி போல, தன் மனைவியின் வழக்குகளைக் கேட்பார் பரசுராமன்.