பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சுற்றுலா - 33 ஏவுகிறார் அந்த வைத்தியநாதன்! தொழிற் சாலை யிலுள்ள எந்திரங்களை அக்கறையுடன் பார்த்து அவைகளுக்கு ஓய்வு தரவேண்டும். எண்ணெய் இடவேண்டும் என்றெல்லாம் ஆணை இடுகின்றாரே! ஆனால், அவரது உடலை அவர் அலட்சியம் செய்து கொண்டேயிருந்தார் அவரையும் அறியாமல். ஒரு சில சமயத்தில், அவருக்கு தலைசுற்றல் வரும். தள்ளாட்டம் வரும், பலஹீனம்தான் மருந்து சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று அந்த நேரத்தை அப்படியே சமாளித்துக் கொள்வார். - - இருந்தாலும், உடல் அவருக்கு இணங்கிப் போகவில்லை. அடிக்கடி டாக்டரைப் போய்ப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. டாக்டர் அவரை நன்கு பரிசோதித்துப் பார்த்தார். பல கேள்விகள் கேட்டார். பிறகு, அவரது கருத்தைக் கூறினார். 'நீங்கள் ஒருமாதம் வீட்டிலே இருந்து நல்ல ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் எதிர்பார்க்கிற நிலைமை வரும் என்று டாக்டர் பேசியவுடன்ே, வைத்தியநாதன் நிமிர்ந்து உட்கார்ந்தார். 'என்ன டாக்டர் இப்படிக் கூறுகின்றீர்கள்? நான் ஒரு மாதம் ஓய்வு எடுத்துக் கொள்வதா? நான் ஒய்வு எடுத்துக் கொண்டால், தொழிற்சாலைகளுக்குப் போகா விட்டால் தொழிற்சாலைகள் என்னாவது? தொழிலாளர் பிரச்சினைகள் தலைதூக்கி விடுமே உற்பத்தி குறைந்து போகுமே! பிறகு அவற்றை எவ்வாறு ஈடுகட்ட முடியும்? படபடவென்று பொரிந்து தள்ளினார் வைத்தியநாதன். டாக்டர் அமைதியாகச் சிரித்துக் கொண்டார்.