பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இதையெல்லாம் பார்த்தது ஒரு பீங்கான் பாத்திரம். தனக்கு வந்த ஆத்திரத்தை அடக்க முடியாமல், அனல் கக்க எல்லாவற்றையும் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தது. - யாரிடம் சொன்னால் தன் குறை தீரும் என்று திரும்பித் திரும்பிப் பார்த்தது. தன் அருகே நகரும் அட்டையிடம் சொல்லலாமா? தாவிப்போகும் தவளையிடம் சொல்லலாமா? தாராளமாய் பாடித்திரியும் வண்டிடம் சொல்லலாமா? அலைபாய்ந்து கிடந்த்து அது. அதன் வேதனையைப் பார்த்த தாமரை இலை ஒன்று, தான் இருப்பதை அசைத்துக் காட்டி, பீங்கான் பாத்திரத்திற்கு உணர்த்தியது. தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தாமரை இலையைப் பார்த்து, தன் குறையை சொல்லத் தொடங்கியது அந்த பீங்கான். 'பாருங்கள் இந்த மழைக்கு இருக்கும் திமிரை மண் சட்டிக்குள் போய் வீழ்ந்து கிடக்கிறது. உடைந்த கண்ணாடித் தம்ளருக்குள் உருண்டோடுகிறது, நான் என்ன அதுகளுக்குக் குறைந்தா போய் விட்டேன் என்னிடம் மட்டும் வந்து தங்கமாட்டேன் என்கிறது?’’ என்றது. 'ஏன் ! உன் மேல் மழைக்கு என்ன கோபம்? என்மேல் விழுந்தால் முத்தாக உருண்டு போகிறது. எனக்கும் கூட வருத்தம்தான். என் மேனி முழுவதும் தண்ணிராக நிற்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். ஆனால், ஒரு சிறு குண்டுபோல நின்று என்னை