பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சுற்றுலா 4 9. சக்தியும் சகதியும் அலங்காரம் நிறைந்த அரண்மனை போன்ற அந்த வீட்டில், அந்தகாரம் சூழ்ந்தது போன்ற ஓர் அவல சூழ்நிலை. தேனிக்கள் போல சுறுசுறுப்பாகத் திரிகின்ற வேலைக்காரர்கள் எல்லோரும், சோகம் தாக்கிய முகத்துடன் செயலற்று நின்றனர். எந்த நேரத்திலும் எதுவும் நிகழலாம் என்று எண்ணுகின்ற பொழுதே, அவர்களது இதயங்கள் அலறிப் புடைத்துக் கொண்டு அதிகமாகத் துடிக்கலாயின. வேலைக்காரர்களுக்கே இந்த நிலை என்றால், வேண்டியவர்களுக்கு எப்படி இருக்கும்! அந்த வீட்டின் உரிமையாளர், அதாவது அந்த வீட்டு எஜமான் சுப்ரமணியம், எல்லோருக்கும் நல்லவர் என்ற பெயரை எடுத்தவர். அந்த ஊரிலே பெரிய பணக்காரர் என்ற பட்டம் பெற்றவர். அப்படிப்பட்டவர் மரணப் படுக்கையில் கிடக்கிறார் என்பதால் தான், அந்த வீடு அப்படி வெறிச்சோடிக் கிடக்கிறது. மரணத்துடன் போராடிக் கொண்டு இருக்கும் தந்தையின் அருகில் அவரது ஒரே மகன் வந்து நிற்கிறான். தந்தை தன்னிடம் பேசவேண்டும் என்று விரும்பினார் என்றதும், அவனும் ஓடிவந்து, கைகளை கட்டியவாறு கட்டிலின் அருகே அவரது முகத்தை, வைத்த விழிகள் பின்வாங்காமல் பார்த்துக்கொண்டு நிற்கிறான். சுப்ரமணியம் சோகமாய் நிற்கும் தன் அன்புச் செல்வத்தைப் பார்த்தார். இறுதிப் பயணத்தின் எல்லைக் கோட்டில் தான் நிற்பதை பற்றிக் கூறினார். இனி