பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சுற்றுலா - - 45 உடம்பெல்லாம் எரிச்சல் மனதிலே கவலை. மாறாத வருத்தம். - --- இப்படியாக சம்பாதித்த பத்து ரூபாயை எடுத்துக் கொண்டு, அலமாறியின் முன்னே போய் நின்றான். அவசர அவசரமாக அலமாரியைத் திறந்தான். கதவு திறந்ததும் அவனது மலர்ந்த முகத்திலே பணக்காற்று எதிர்த்து வந்து மோதியது. கண்கள் அகலமாக விரிந்து கொண்டன. இனி, இந்த பத்து ரூபாயைப் போட வேண்டியது தான். பணத்தை அள்ளிக் கொள்ள வேண்டியதுதான், மனம் துள்ளிற்று. பத்து ரூபாயை அலமாரியில் போட்டான். அந்தக் கத்தை நோட்டுக்களை எடுக்கப் போகும் பொழுது அவனது கை கூசியது. ஒரு வித நடுக்கம். ஒரு வகைக் கூச்சம். மனம் தடுமாறியது. இஷடம் போல் செலவு செய்ய எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று அப்பாதான் அனுமதி கொடுத்து விட்டுப் போய் விட்டாரே! பிறகென்ன தயக்கம்? பேய் மனம் பேசியது. ஒரு பத்து ரூபாய் சம்பாதிப்பதற்குள் இத்தனை துயரங்களையும் துன்பங்களையும் அடைந்தேனே! பத்து நாள். பேயாய் திரிந்து. மாடாய் உழைத்து, பத்து ரூபாய் தான் என்னால் சம் பாதிக்க முடிந்தது. இத்தனை ரூபாய்களையும் சம்பாதிக்க என் அப்பா எவ்வளவு நாள் உழைத்திருக்க வேண்டும்? எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டும்? என்னென்ன துன்பங்களுக்கு ஈடு கொடுக் திருக்க வேண்டும்?