பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா தான் பட்ட கஷ்டங்களை அந்த மகன் நினைத்தான். தந்தை பட்ட கஷடங்களையும் நினைத்துப் பார்த்தான். அவனது கை, அலமாரியை மூடத் தொடங்கியது. 'வீணாக செலவு செய்ய எல்லோருக்கும் தெரியும்! விநயமாக சம்பாதிக்கத் தான் முடியாது’ என்ற உண்மை அவனுக்குப் புரிந்ததால் தான், அலமாரியை மூடி விட்டான். 'இருக்கின்ற பொருளை இஷடப்படி செலவாக்கிக் கஷடப்படாமல், சம்பாதிக்கின்ற பொருளுக்கு ஏற்ப, சமர்த்தாக செலவு செய்வேன்' என்று முடிவு எடுத்துக் கொண்டான் அவன். அவனது மனம் இலேசாக இருந்தது, இன்பமான அமைதியும் எதிர்பார்த்த மகிழ்ச்சியும் அவனுக்குக் கிடைத்தது. இறைவனாகிய தந்தையும், மனிதனாகிய மகனுக்கு இப்படித்தான்தேகத்தில் சக்தி என்கின்ற சகல விதமான சம்பத்தையும் தந்திருக்கிறார். சக்தியை சேர்க்காமலேயே செலவு செய்ய விரும்புகின்ற மகன்கள் தான், இன்று ஏராளமாக நாட்டில் இருக்கின்றனர். உடலின் சக்தியை சேர்க்காமல் அதிகமாக செலவு செய்து விடுகின்றவர்களின் வாழ்க்கை, சகதியாகத் தான் மாறிப் போய் விடுகிறது. சக்தியில் உள்ள புள்ளி போல, செலவுக்கும் ஒரு புள்ளி வைத்து, சக்தியை சேர்த்துக் கொண்டால், தேகம் திறமையுடன் செயல்படும், தேடுகின்ற இன்பமெல்லாம் நம்மைத் தேடி வரும், ஓடி வரும், கூடி விடும். அந்த அறிவுள்ள மகனாக நாமும் நினைத்தால் வாழலாம் அல்லவா!