பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 டாக்டர். எஸ். நவராஜ் செல்லைய மனிதர்கள். இவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள் ஆர்வத்துடன் வந்து அமர்ந்த அவர்கள், இதோ உணை கையில் எடுத்து விட்டார்கள். பிறகு? அடுத்தவன் வாய் பக்கம் ஒரு கை செல்கிறதே! ஆமாம்! தன் வாய்க்கு வராத உணவை, அடுத்தவன் வாய்க்குக் கொண்டு போய் ஒருவன் ஊட்டுகிறான். அதேபோல் பக்கத்தில் உள்ளவன் கை உணவு, அவன் வாய்க்கு வருகிறது. இப்படியாக, ஒருவர்க்கொருவர் மாற்றி மாற்றி ஊட்டிக் கொண்டு, உதவி செய்தவாறு உணவை உண்கின்றனர். பசி ஆறுகின்றனர். திருப்தி அடைகின்றனர்.” முக மகிழ்ச்சியுடன் எழுந்து அவர்கள் செல்வதைப் பார்த்த மனிதன், இது தான் சொர்க்கம் என்று எண்ணி வெளியே வருகிறான். இருக்கின்றதையெல்லாம் தானே அனுபவிக்க வேண்டும். என்ற வேகத்தில், வெறியில், சுயநலத்தில், பொறாமை உணர்வில், நரக வாசிகள் முயன்றனர். முடிவு! அவர்கள் தானும் அனுபவிக்கவில்லை. பிறரையும் பெற விடவில்லை. ஏமாந்து, ஏக்கமுற்று, இன்னல்பட்டு, எரிச்சலுக்கு ஆளாகி, துன்பமே துணை என்று சோர்ந்து அழிகின்றனர். ஆனால், இருப்பதையெல்லாம் பிறருக்குக் கொடுத்து உதவி, அவர்களிடமிருந்து தானும் பெற்று இன்ப வாழ்வை வாழ்கின்றனர் சொர்க்க வாசிகள் என்பதை கண்டுகொண்ட மனிதன், தனக்குள்ளே நகைத்துக் கொண்டானாம்.