பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஆமாம் அரசே! இந்த காய் மிகவும் மோசமான காய் தான். அதன் திமிரை அடக்குவதற்காகத்தான், ஆண்டவனே அதன் அமைப்பை உருவாக்கியிருக்கிறார். அதன் தலையைப் பாருங்கள். தலைப்பாகத்தில் ஒரு மூடி போட்டது போல வைத்து, அதன் உச்சியில் ஆணி அடித்தது போல வைத்து. அவமானப்படுத்தி இருக்கிறார். அதன் கர்வம் இன்னும் அடங்கவில்லை பார்த்தீர்களா!' என்று கேவலமாகப் பேசினார். மன்னர் மந்திரியின் பதிலால் மகிழ்ச்சியடைந்தார். மந்திரிதப்பித்துக் கொண்டார். அல்ல அல்ல, பிழைத்துக் கொண்டார். கத்தரிக்காய் அமைப்பை வைத்துக் கொண்டு, அதன் அழகை உயர்த்தியும். அரசன் விரும்பாதபோது. அதையே தாழ்த்தியும் பேசிய மந்திரி, தந்திரவாதி தானே! வாழ்க்கையில் இப்படித்தான் பேசி பிழைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. தனக்கு சாதமாகத்தான் பேசவேண்டும் என்று ராஜா எதிர்பார்த்தது போலவே, ஆட்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள். அவர்களை கா... கா. பிடித்துக் கொள்ள வேண்டும் என்று மற்றவர்களும் முயல்கின்றார்கள். உண்மை சில நாட்களில் வெளி வரும் போது, கச்சிதமாகக் காகா பறந்து போய் விடும். பொறுப்பில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளும் பொழுது. அது போதாத காலமாக அவர்களுக்கு மாறிபோவதும் உண்டு. விளையாட்டுத் துறைக்கும் இது பொருந்தும் என்று படிப்பவர்கள் நினைத்தால், இதனை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறோம்.