பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சுற்றுலா 59 போது'... தலைவரின் குரல் கரகரத்தது. கண்களில் கண்ணிர் முட்டிக் கொண்டு வந்து நின்றது. வெளியே வந்து விழட்டுமா என்று கண்ணிர்த் துளிகள், பயமுறுத்திக் கொண்டிருந்தன. / மீண்டும் பேச்சினை சிரமப்பட்டுத் தொடர்ந்தார் தலைவர். எல்லோரும் என்னை வரவேற்றபோது, ஒரு கூட்டம் மட்டும், நான் எங்கே சென்றாலும் அங்கே வந்து விரட்டியது. விடாமல் விரட்டியது. யாரோ ஒரு பயங்கர எதிரியைப் பார்த்து விட்டது போல விரட்டியது.” 'யார் விரட்டியது! இங்கே சொல்லுங்கள்! நாங்கள் இருக்க நீங்கள் அஞ்சலாமா! கூசாமல் கூறுங்கள். கொன்று குவித்து விடுகிறோம்” என்று கூட்டத்திலே கோபக் குரல்கள் கொப்பளித்துக் கொண்டு எழுந்தன. 'யார் யார் என்ற கேள்விக்குப் பதில் கூறுகிறேன்! அந்தக் கூட்டம் நம் இனத்துக் கூட்டம்தான். அவைகள் தான் என்னை வந்து வந்து விரட்டின. மற்றவர்கள் முன்னே அவமானப் படுத்தின. எல்லோரும் போற்றுகின்ற போது நம் இனத்து ஜீவன்கள் மட்டும் ஏன் என்னைப் பார்த்துக் குலைக்க வேண்டும்?” நாய்கள் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டன. அவைகளுக்குப் புரியவில்லை, தலைவர் பேச்சை முடிக்கும் பொழுது... எங்கேயிருந்தோ ஒருகல்... சலசலப்பு - கூட்டத்தில் குழப்பம். லொள் லொள் என்று ஒன்றையொன்றுக் கடித்துக் கொண்டு ஒடத் தொடங்கின.