பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சுற்றுலா 61 13. தம் பிடித்த தவளை! இராமனுக்கு எப்பேர்பட்ட கவல்ை? இப்படி ஒரு நிலைமை ஏற்படலாமா? யாருக்கும் வராத, யார் வாழ்விலும் நடந்திராத சம்பவம் ஒன்றல்லவா நேர்ந்து விட்டது! எல்லாம் வல்ல இராமனுக்கே இந்த கதி என்றால், நாம் எல்லாம் என்ன செய்யப் போகிறோம்? என்ன செய்ய முடியும்? அது சரி... யார் அந்த இராமன்? அவனைப் பற்றி எங்களுக்கு என்ன தெரியும்? என்ன தான் அவனுக்கு நேர்ந்து விட்டது என்று நீங்கள் தம்! பிடிப்பதும், முணுமுணுப்பதும் கேட்கிறது. உடனே சொல்லா விட்டால், மேற்கொண்டு படிக்க மாட்டோம் என்று நீங்கள் கோபித்துக் கொண்டு கூறுவதற்கு முன்பே. பகவான் பெயரை சொல்ல நான் ஏன் தாமதம் செய்து, உங்கள் கோபத்துக்கு ஆளாக வேண்டும்? சாட் சாத் ரீராமன் தான் அவன், ē & ᏮᏂᏇ உயிர்களையும் சம்ரட்சித்துக் காக்கின்ற திருமாலின் திரு அவதாரமாகிய ரீராமன். சீதா ராமன். அந்த அயோத்தி ராமனுக்குத்தான் அப்படி ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டது. தாயின் சொல் லைக் கேட்டு, தந்தையின் ஆணையாக வந்த சொல்லுக்காக, ரீராமன் கானகம் செல்ல, நானும் வருவேன்' என்று நாயகி சீதா பிராட்டியும் பின் தொடர, சின்னவன் இலக்குவனும் சேர்ந்து நிழலாக வர, இந்தக் கதைதான் உங்களுக்குத் தெரிந்த கதையாயிற்றே!