பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7() டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா ಟ್ವಕ್ಡ குடிசையில் வசிக்கும் குமரனை இன்று தூங்கி விழித்ததும் பார்த்தாக வேண்டும். அவன் எப்படி இருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டாக வேண்டும். அந்த ஆவல்தான் அவனை அவ்வளவு சீக்கிரம் எழுப்பிவிட்டது. காலை 6 மணியாயிற்று. அலாரம் வைத்து எழுபவன் போல குமரன் விழித்துக் கொண்டான். அவனைச் சுற்றியுள்ள சூழ்நிலையைப் பார்த்து சிரித்துக் கொண்டான். அவனைச் சுற்றிக் குழந்தைகள். நான்கு குழந்தைகள். எல்லாம் பத்து வயதிற்குள்ளாக நடமாடும் பிறவிகள். ஒரு குழந்தையின் கால்கள் இரண்டும் அவன் வயிற்றின் மேல், இன்னொரு குழந்தையின் ஒரு கால் அவனது கழுத்தை அழுத்திக் கொண்டிருந்தது. மற்றொரு குழந்தை அவன் மார்போடு கையைப் போட்டவாறு உறங்கிக் கொண்டிருந்தது. இன்னொரு குழந்தை தனியே படுத்து உறங்கியது. அது பொழிந்த 'சிறுநீர் ஓடி வந்து அவனது வேட்டியை நனைத்து விட்டிருந்தது. இத்தனையையும் பார்த்து அவன் சலித்துக் கொள்ளவில்லை. மாறாக சிரித்துக் கொண்டான் ! அவனது மனைவி வெளியே வாசலில் தண்ணிர் தெளிக்கிற சத்தம் கேட்டது. மெதுவாக எல்லாவற்றையும் அப்புறப்படுத்திவிட்டு வெளியே வந்தான் குமரன். வாசலுக்கு வெளியே வந்தவனைப் பார்த்துவேகமாக வந்தான் வடிவேலன்.