பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 16. அகரமும் சிகரமும் அஸ்திவாரத்தை நினைக்கவில்லை. அலங்கார மாளிகையை நினைக்கிறோம். அழகு படுத்த முனைகிறோம். அ ஆ என்று அகரத்தைக் கற்க முனையவில்லை. அருமைமிகு கவித் திறமையும் ஆன்ற எழுத்தாற்றலும் பெருக வேண்டும் என்று விழைகிறோம். நிற்கவே இயலவில்லை. இதிலே, நெடுந்துாரம் ஒடவும், பயணம் போகவும் நினைக்கிறோம். கனைக்கிறோம். என்றாலும், இராட்டினக் குதிரையில் ஏறியவர் விரைந்து பறந்தாலும், இருந்த இடத்திலேயே சுற்றிக் கொண்டு இருப்பது போலேவே இருக்கிறோம். துடிக்கிறோம். எவ்வளவோ பொருளை அள்ளி இறைக்கிறோம். கூசாமல் கொடுக்கிறோம். என்றாலும் காலமும் உழைப்பும். பொருளும் முயற்சியும் தான் வீணாக செலவாகின்றதே தவிர, சிந்தை விரும்பியது கிடைக்கவில்லை. உடலுக்கு ஒரு கல்வி. உடலுக்காகத் தான் அந்தக் கல்வி உடலை நினைக்கின்ற கல்வி. உடலால்தான் உலக வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்ற உண்மையை உணர்த்துகின்ற ஒப்பற்ற