பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 'தண்ணிரிலுமா இருக்கிறார் என்றான் சீடன். மிக எளிதாக இறைவனைப் பார்த்து விடலாம் என்பதில் தான் அவனுக்கு எவ்வளவு வேகம்! ஆமாம்! தண்ணிரிலும் இருக்கிறார்! குருநாதரின் பதில் அந்த சீடனின் உள்ளத்தை குதூகலப்படுத்தியது. தன் கேள்விக்குக் கிடைத்த பதிலில் கிளர்ச்சியடைந்து போனான். விடையை வாய் மொழியாகவே வைத்துக்காக்க அவன் விரும்பவில்லை. அனுபவ ரீதியாக ஆய்ந்து - அறிந்து, ஆண்டவன் தரிசனத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆவேச உணர்வில் கிளம்பி விட்டான் அந்த சீடன். குருநாதரும் சிரித்தவாறே ஆசிர்வதித்து அனுப்பிவைத்தார். சீசா ஒன்றில் தண்ணிர் இருப்பதைப் பார்த்தான் பெரும் தெய்வத்தை தேடித் திரிந்த சீடன். அருகில் சென்றான். 'தெய்வமே என்றான் தண்ணிரைப் பார்த்து. சீசாவின் உள்ளே இருந்த தண்ணிர், சீடனைப் பார்த்து, தெய்வமா நான் அல்ல அல்ல. வெறும் தண்ணிர் தவறாக அப்படி நினைக்காதே’ என்றது தண்ணtர். - தண்ணிரே தெய்வமாய் இருக்கிறது என்றார் என் குருநாதர். தெய்வம் தானே நீர் என்றான் சீடன். தெய்வத்தின் படைப்பு நான், தெய்வத்திற்கோ வடிவம் இல்லை. சொந்தம் இல்லை, பந்தம் இல்லை, பிறப்பு இல்லை. விடுப்புமில்லை. நானோ இந்த சீசாவுக்குள் அடைந்து கிடக்கிறேன். எனக்கென்று ஒரு வடிவம் ஏற்பட்டு விட்டது. இந்த சீசாவின்