பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தனைச் சுற்றுலா 79 சொந்தக்காரனுக்கு நான் ஆட்பட்டிருக்கிறேன். நான் தெய்வமில்லை என்று நழுவிக் கொண்டது சீசா தண்ணிர். ஓகோ வடிவமில்லாது இருந்தால்தான் தெய்வம் போலும் சொந்தபந்தமில்லாத தண்ணிர் தான் தெய்வமாக இருக்கமுடியும் என்று சீடன், சிந்தனை செய்தவாறு போய் கொண்டிருந்தான். எதிரே ஏரி ஒன்று தெரிந்தது. அவன் மனம் நினைவுக் குவியலாக நெளியத் தொடங்கியது. இந்த ஏரி யாருக்கும் சொந்தமில்லை. இந்த நீருக்கு வடிவமும் இல்லை. ஆகவே, இதுதான் தெய்வம் என்று எண்ணி ஒரு முடிவுக்கு வந்தவனாக, ஏரியிடம் சென்று தண்ணிரைப் பார்த்து தெய்வமே என்று வணங்கினான்! ஏரித் தண்ணீர் அவனை ஏற இறங்கப் பார்த்தது. தன்னைப் பற்றி புரியாமல், 'தெய்வமே' என்று அழைக்கும் அவனைப் பார்த்து - அழுவதா சிரிப்பதா என்று புரியாமல் முணுமுணுத்தது. தெரியாமல் என்னை அழைத்து விட்டாய். நான் தெய்வமில்லை. தெய்வத்திற்கு எல்லையில்லை என்பது உனக்குத் தெரியாதா ஒரு கட்டுக்கள் அடங்காது, எல்லாவற்றையும் கடந்ததுதானே கடவுள் என்பது! ஒரு கட்டுக்குள், ஒரு எல்லைக்குள், ஒரு வரையறைக்குள் ஊசலாடிக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்தால். உனக்குத் தெய்வமாகவா தெரிகிறது என்றது ஏரிநீர்! உண்மைதான். சீடனுக்கு சித்தத்தில் சற்று உறைக்க ஆரம்பித்தது. எல்லையில்லாமல், எல்லாவற்றையும் கடந்தவன் தானே கடவள். இது தெரியாமல், இந்தத்