பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா தண்ணிரை தெய்வம் என்று அழைத்து விட்டோமே! தவறுதான் என்று தன்னிலை மாறி, தன் பயணத்தை மேலும் தொடர்ந்தான். சீடன் மனதிலே சிறுசிறு சலனங்கள். தான் என்ன செய்யலாம் என்று புதிர் போட்ட பயணத்தின் நடுவிலே. எதிரே வற்றாத ஜீவநதியாக ஓடிக் கொண்டிருந்த ஒரு ஆற்றைப் பார்த்தான். மீண்டும் அவனுக்கு சலனங்கள். இதுவரை எதிர்த்துப் பேசப்பட்ட எல்லா தடைகளையும் விட்டு, மீறி நிற்கிறது இந்த ஆறு. ஆக இதுதான் தெய்வம் என்று முடிவு செய்தவனாக, ஆற்று நீரைப் பார்த்து, தெய்வமே என்று அழைத்தான். அவனை வியந்து நோக்கியது ஆற்று நீர் விவரம் இல்லாத மனிதனாக அல்லவா இந்த மனிதன் விளங்குகிறான். அவனுக்கு எப்படி எடுத்துரைத்தால் தெளிவாகும் என்று அவனை நோக்கியது. 'மனிதா! கடவுளுக்கு முதலும் இல்லை. முடிவும் இல்லை என்பதை நீ அறிவாயல்லவா! எனக்கோ தொடக்கம் இருக்கிறது. கடைசியில் கடலோடு கலக்கும் முடக்கமும் இருக்கிறது. நான் எந்த விதத்தில் பொருத்தமானதாக உன் அறிவுக்குப் படுகிறது. ஆகவே, என்னை இனிமேல் தெய்வம் என்று அழைக்கின்ற தவறைச் செய்யாதே' என்று ஆற்று நீர் அவனை ஆற்றுப் படுத்தியது. புரிந்து கொண்டான் சீடன் இனி, போகும் திசைதான் என்ன? புத்தியில் அலையாக சிந்தனைகள் புரண் டன. முடிவு! கடல் என்று ஒன்று இருப்பது