பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தனைச் சுற்றுலா 87 கருத்துக்களை அல்லவா புதையலாகப் பொதிந்து நிற்கின்றன. பாப்பா என்று அழைத்தான் பாரதி பெரிய்வர்களைப் பார்த்து விளையாடு என்று சொல்லாமல், பாப்பாவைப் பார்த்து விளையாடு என்றானே! ஏன் ? தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்களே! அதுபோல்தான். இளமையில் கல்; ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமோ என்ற பழமொழிகளுக்கேற்ப, விளையாடும் விதங்களையும், வித்தைகளையும், இளமையிலேயே கற்றுக் கொண்டால், அது என்றென்றும் தொடர்ந்து வரும், நீடித்து நிற்கும் என்ற கருத்தில்தான் பாப்பாவைத் தேடிச் சொன்னான். விளையாடுகின்ற இயல்பூக்கங்கள் குழந்தைகளின் உணர்வுகளிலே ஊறிக்கிடக்கின்றன. அவை இயல்பான உணர்ச்சித் தூண்டல்கள் என்பதால், ஊற்றாக ஊறி, அருவியாய் குதித்து, அலையாய் புரண்டெழும் உணர்வூக்கங்களைத் தடை செய்யக் கூடாது என்பதற்காகத் தான் இயற்கை அளித்த ஆற்றலை ஏற்று மகிழ்ச்சி கொள் என்பதற்காக பாப்பாவிடம் கூறுகிறான். 'விளை என்பதற்கு விருப்பம் என்று பொருள் கூறுவார்கள். 'விருப்பமாய் ஆடுவதைத் தான் விளை யாட்டு’ என்றனர். உடலுறுப்பக்களை விருப்பம்போல் இயக்கி மகிழ்வதையும். விளையாட்டு என்றே அழைத்தார்கள் நமது முன்னோர்கள். உணர்வுகள் இருக்கின்றன. உள்ளமும் இருக்கிறது. கவலைகளே கண் முன் "م= A© ... - * * * * : * ~ * , so -- + ன்கே வாத காலமாய் இளமைக்