பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SO டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா தூய்மையாய் இருக்கிறது. நாடி வருவோர்க்கெல்லாம் நல்லது செய்து கொண்டே நன்மை தருகிறது. புகழைப் பெறுகிறது. அந்த இயல்பினை அறிந்த பாரதி, எப்பொழுதும் ஓய்ந்திருக்க வேண்டாம். உண்ணவும் உறங்கவும் கூடிய நேரம் தவிர, உழைப்பில் நாட்டம் கொள். முயற்சியில் ஊட்டம் கொள், முன்னேற்றப் பாதையில் முனைந்து செல் என்கிற லட்சிய வெறியை உண்டாக்கும் வழிகளில் ஓய்ந்திருக்கலாகாது என்கிறான். உற்சாகமாக ஓடி விளையாடுகின்ற குழந்தைகள். தனித்தே ஆடிட முடியுமா? அதில் இனிமை தான் பெற்றிட இயலுமா? பலருடன் சேர்ந்து விளையாடினால் தானே, பண்புகளைக் கற்றுக் கொள்ள முடியும்? 'மனிதரை கூடி வாழும் மிருகம் என்று சமூக நூல் வல்லுநர்கள் கூறுவார்கள். கூடி வாழும் குல வித்தையை இளம் வயதிலிருந்தே கற்றுக் கொள்ளும் வாய்ப்பினையும். வளமான வழிகளையும் விளையாட்டு ஒன்றே அளிக்க முடியும் என்பதை பாரதி அனுபவபூர்வமாக உணர்ந்திருப்பதால் தான், கூடி விளையாடு பாப்பா என்கிறான். கூடி விளையாடும் பொழுது தான் என்கிற அகந்தைக் குணத்தைத் தள்ளிவிட நேரிடுகிறது. மற்றவர்களுடன் மனதாலும் செயலாலும் ஐக்கியம் ஆகிட முடிகிறது. தன் திறமையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்திக் காட்டி மகிழ முடிகிறது. வேண்டும் பொழுது, பிறர் திறமைகளுக்கு ஈடாக தன் திறமையை யும் வளர்த்துக் கொள்ளத் தூண்டுகிறது.