பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா நீ சொல்வது உண்மைதான். உப்புத் தண்ணிர் பட்ட நாக்கிலே ஊற்றுத் தண்ணிர் விழுந்ததும், உவப்பாய் இருக்கிறது. நீ சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. ஒத்துக் கொள்கிறேன். வா போகலாம் என்று அழைத்து விட்டு மெதுவாக நடந்தார். துள்ளிக் குதித்தவாறு முன்னே ஓடிய சிறுவன் திடீரென நின்றான். கைக்குட்டையை எடுத்து, மூக்கை அடைத்துக் கொண்டான். திரும்பி தாத்தாவிடம் ஓடி வந்தான். நாற்றம் சகிக்கவில்லை. குடலைப் பிடுங்குகிறது. சீக்கிரம் வாருங்கள். அதைக் கடந்து போய் விடலாம் என்றான். என்ன காரணம்? ஏதாவது மிருகம் இறந்து கிடக்கிறதா? என்றார் பெரியவர்! இல்லை, இல்லை, ஆறு மாதிரி ஒன்று இருக்கிறது. அதில் உள்ள தண்ணிர் தான் அப்படி நாறுகிறது. இந்த இடத்தில் உள்ளவர்கள் எப்படித்தான் வாழ்கிறார்களோ? இந்த நாற்றத்தை சகித்துக் கொள்கின்றார்களோ? இந்த ஓடாத அல்ல அல்ல, ஒடிக் கொண்டிருக்கும் ஆற்றுக்குப் பெயர் கூவம் என்பது. புரிகிறதா என்றார் பெரியவர். புரிகிறது புரிகிறது என்று கையைப் பிடித்துக் கொண்டு ஓடினான். நாற்றத்தை அவனது மூக்கு ஏற்றுக் கொள்ளாமல் விரட்டியடித்தது. பெருமூச்சு விட்டபடியே நின்ற தன் பேரனை வந்து பிடித்துக் கொண்டார் பெரியவர்.