பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

  • ஒரு பணியின் நற்தண்மை, அதனைச் செய்யும் கருவிகளில்

எப்போதுமே இருப்பதில்லை; ஆனால் உறுதியாக அதனைச் செய்பவரிடமே எப்போதுமே உள்ளது. மாக்சிம் கோர்கி

  • செயல்களைச் சொற்களாக மாற்றுவதைவிட, சொற்களைச் செயல்களாக மாற்றுவது கடினமானது. மாக்சிம் கோர்கி
  • ஒரு பெரிய வெற்றி என்பது எதிர்பார்க்கப்பட்ட கணக்கிடப்பட்ட சிறுசிறு பகுதிகளின் தொகுப்பேயாகும். வி.ஏ.குளுசேவ்ஸ்கி
  • எதனை நீ அடைய வேண்டுமென நீ அறிந்திருக்காவிடில், எந்த

ஒரு செயலுமே சிறப்பாகச் செய்ய இயலாது.

ஆன்டன் மெகரண்கோ

  • நமது சமுகத்தில், திறமை எண்பது அனைத்துக் குடிமக்களும் கட்டாயமாகப் பெற்றிருக்க வேண்டிய ஒரு நற்பண்பாக ஆகி விட்டது; அது பொதுவான பழக்க வழக்கத்திற்கான ஒர் அளவு கோலாக ஆகி வந்து கொண்டிருக்கிறது.

ஆண்டன் மெகரண்கோ * உயர்ந்து ஒலிக்கும் சொற்களின் பின்னால் மறைத்துக் கொள் வதன் முலம் மக்கள் பெரும்பாலும் தாங்கள் செய்ய வேண்டிய வற்றைச் செய்ய அடிக்கடித் தயங்குகின்றனர்.

எண்.கே. குருப்ஸ்கயா * பேச்சும், சொற்களும் தேவைதான்; ஆனால் அவை ஒரு தொடக்கம் மட்டுமே. வாழ்க்கையின் உட்பொருள் என்பது செயல்களிலும், சொற்களிலிருந்து செயல்களுக்குச் செல்லும் ஆற்றலிலும், சொற் களுக்கு இணையான செயல்களிலும் இருப்பதாகும்.

  • . திமிட்ரி மென்டலேயேவ்
  • உனது உள் மனம் குறைவாகச் சிதறலடையும் போது, உனது சிந்தனையும், சொல்லும், செயலும் அதிக நெருக்கமாக பின்னப் பட்டவையாக ஆகிவிடுகின்றன. நிகலாய் பிகரேவ்

98