பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

  • எளிதாக அடையப்பட்ட எதுவும், முயற்சியின்றி அடையப்பட்ட

எதுவும், அய்யம் மிகுந்த மதிப்பையே பெற்றிருக்கும்.

இலியோனிட் லியோனோவ்

  • செய்வது எந்தப் பணியாயிருப்பினும், அதனுடைய பழக்கமும், அது உண்டாக்கும் ஆற்றலும் மிகப் பெரிய பொருண்மைகளே. தான் செய்ய எதுவுமே இல்லாத போதும், தனது கைகளின் மேல் அமர்ந்து கொண்டிராதவன், செயலுக்கான நேரம் வரும் போதுதான் எண்ன வேண்டும் என்பதை அறிந்திருப்பவன் ஆவான். விசாரியோன் பெலன்ஸ்கி
  • வேலை மனிதனை மாண்புற மேன்மைப்படுத்துகிறது.

விசாரியோன் பெலன்ஸ்கி

  • உழைப்பு, போராட்டம் தவிர வேறெதுவும், வேறுமையையும்,

பெருமை என்ற ஒர் உணர்வையும் உறுதியளிக்காது.

பியோடர் தோவ்தோயெவ்ஸ்கி

  • வேலை மனிதனின் படைப்பாற்றல்களை உருவாக்குகிறது.

ஏ.என். தோல்கதாய்

  • வேலை இன்றியமையாததாக உள்ள ஒரு பாதையில் உனது வாழ்க்கையை நீ அமைத்துக் கொள்ள வேண்டும். வேலையெண் பது இன்றித் துய, மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது கற்பனை செய்து பார்க்க முடியாதது ஆகும். ஆண்டன் செகாவ்
  • ஒவ்வொருவரும் வேலை செய்ய வேண்டும். அவர் எவராயிருப்

பினும் நெற்றியில் வியர்வை வழியும் வரை வேலை செய்ய

வேண்டும். ஏனெனில் இது ஒன்றுதான் வாழ்க்கை, மகிழ்ச்சி, மிகுந்த இன்பம் ஆகியவற்றின் நோக்கமும் பொருளும் ஆகும்.

- ஆண்டன் செகாவ்

  • பொது நலனுக்காகப் பணியாற்றுவதில் உண்னை நீயே

முன்னேற்றிக் கொள் - அதுதான் அடிப்படை விதியாகும்.

ஜானிஸ் ரெய்னிஸ்

103