பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தண்

னர். ஒர் எழுத்தாளர் என்பவர் அறிவார்ந்தவராகவும், அதனிலும் இரட்டிப்பாகக் கருணை மனம் கொண்டவராக இருக்க வேண்டும். பி.ஏ. பவலெண்கோ

  • காலம் கனிந்து வரும்போது, திறமை என்பது தன்னைத் தானே மெய்யித்துக்கொள்கிறது. ஆனால் பேரறிவோ அதன் காலத்திற்கு

முன்பே தன்னை மெய்ப்பித்துக் கொள்கிறது.

பி.ஏ. பவலெண்கோ

  • ஒர் எழுத்தாளர் தம் புத்தகத்தில் முழுவதுமாகத் தம்மையே உட் செலுத்திவிடுகிறார். அது போலவே இசை அமைப்பாளரும் தமது இசையில் தம்மை உட்செலுத்திக் கொள்கிறார். இங்கு அவர்கள் எஞ்சிய காலம் முழுவதும் நிலைத்து வாழ்கின்றனர். ஒரு புத்தகத்தைத் திறவுங்கள், இசையைக் கேளுங்கள், உங்களால் படிக்க முடியுமானால், நீங்கள் அவற்றின் படைப்பாளர்களால் எதிர்க்கப்படுவீர்கள். வி.ஒ.குளுசேவ்ஸ்கி
  • திறமை எண்பது தன்னைத் தானே எரித்துக் கரியாக்கிக் கொண்டு, தன்னையே சுட்டெரிக்கும் பிழம்பால் மற்றவர்களுக்கான பாதையை ஒளியூட்டும் தெய்விக ஒளிப்பிழம்பாகும். வி.ஒ.குளுசேவ்ஸ்கி
  • ஒரு புத்தகம் எண்பது அதன் ஆசிரியரின் ஒப்புதலறிக்கையாகும்; அதுவே மனிதனுமாகும். ஒரு புத்தகத்தின் மூலம், அதன் ஆசிரி யரை மதிப்பிட உன்னால் இயலும். மைக்கேல் கால்னின்
  • ஒன்றைப் புதிதாகப் படைக்க வேண்டுமெனின், ஒருவர் தனது சொந்தப் பாட்டையே பாடவேண்டும். மைக்கேல் கால்னின்
  • ஒரு கலைப் படைப்பின் பொருளடக்கம் என்பது அக் கலைஞரின் பகுதியையே முழுவதும் சார்ந்திருக்கிறது. கலைஞரே பொருள டக்கமாவார். அவரது உள்ளுயிரே அதன் வடிவத்தில் கோயில் கொண்டுள்ளதாகும். எம்.எம்.பிரிஉடிவின

112