பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் •• த. கோவேந்தனர்

  • பேறு பெற்ற எழுத்தாளரின் ஒவ்வொரு படைப்பும், அவரது தனித் தன்மையை எதிரொலிப்பதாகவே இருக்கும்; ஏனெனில் நோக்கத் தில் எடுத்துக்கொள்ளப்பட்ட புறப்பொருள், ஆசிரியரின் மனநிலை யினை ஒட்டியே மிகவும் தனிப்பட்ட முறையில் கையாளப்படு வது என்பது மிகச் சரியாகப் படைப்பு இலக்கியம் பெற்றுள்ளது. வி.வி.வொரோவ்ஸ்கி
  • கலை எண்பது, பொதுவான தண்மை பெற்றிருப்பது என்ற ஒன்றை விரும்பி, தோற்றங்களிலும், உணர்வுகளிலும் ஏற்பட்ட தனிப்பட்ட பட்டறிவுகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும். ஏ.எண். தோல்கதாய்
  • நீ எழுதுவது போல் நீ வாழ்வதுடன், நீ வாழ்வதைப் போலவே நீ எழுது இல்லையெனில் உனது யாழில் வெளிப்பரும் ஒலிகள் போலியானவையே. கே.என். பாபுயுஉ;கோ
  • தங்களது படைப்புகளைப் போன்று உண்மை நிறைந்தவர்களாக வாழும் கலைஞர்களுக்கும், அவர்களது வாழ்வை உண்மை நிறைந்த வகையில் முறைப்படுத்தும் அவர்களது படைப்பு

களுக்கும் நமது காலம் தலைவணங்கி வழிபடும்.

விசாரியோன் பெலின்ஸ்கி

  • எழுதுவதென்பது ஒரு வணிகமோ தொழிலோ இல்லை. அது ஒரு தவமாகும். சில சொற்களை, அவற்றின் சரியான ஒலியை நாம் ஆப்ந்து பார்க்கும்போது, அவற்றின் உண்மையான பொருளை நாம் காண்கிறோம். தவம் என்னும் சொல் ஒலி என்னும், முதன்மை யாக நெஞ்சத்தின் ஒலி, என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். o காண்ஸ்டாண்டின் பவ்ஸ்டோவ்ஸ்கி * சொல்வதற்குப் புதுமையான, இன்றியமையாத, ஆர்வமளிக்கும் ஏதோவொன்றைப் பெற்றிருப்பவரால் மட்டுமே, ஒர் எழுத்தாள ராக இருக்க இயலும். ஏனெனில் மற்றவர்கள் கவனிக்காத பல

வற்றை அவன் காண்கிறான்.

காண்ஸ்டாண்டின் பவ்ஸ்டோவ்ஸ்கி

114