பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தண்

  • ஏதோ புதுமையான ஒன்றினை நீ உணரும்போதும், மக்களுக்குத் தெளிவாக இராத ஒர் இன்றியமையாத பொருள் பற்றி நீ தெளி வாக உள்ளபோதும் ஒன்றினை வெளிப்பருத்தும் தேவை என்பது

உனக்கு அமைதி அளிக்காத போதும் மட்டுமே, நீ எழுது.

இலியோ தோல்கதாய்

  • வாழ்வைப் போலவே கலையும், வலிமை குறைந்தவர்களுக்கான தண்று. அலெக்சாண்டர் ப்ளோக்
  • பேரறிவாளன் என்பவனே மக்களின் முதலும், முடிவுமான தோழ னாவான். அலெக்சாண்டர் ப்ளோக்
  • எண்னைப் பொறுத்தவரை இலக்கியம் எண்பது ஒரு போர்க் களமாகும். எஸ்.எம். ஸ்டெப்னிக் க்ரஷ்சின்ஸ்கி
  • திறமையின் வளர்ச்சிக்கான சமூக சூழ்நிலைகள் ஆதரவாக உள்ள போதே திறமை எப்போதுமே தோற்றம் பெறுகிறது என்பதை நீண்ட காலமாகவே கண்டு வருகிறோம். ஜி.வி.பிளக்கனோவ்
  • எழுத்தாளரின் பார்வை செய்திகளின் உட்பொருளினுடே எவ்வளவு ஆழமாக ஊடுருவிச் செல்கிறது என்பதையும், வாழ்க்கையின் பல்வேறுபட்ட தண்மைகளைத் தாண் வெளிப்படுத்தும்போது அதனை எவ்வளவு அகன்றதாகக் குறிப்பிடுகிறார் என்பதையும் கொண்டே அவரது ஆற்றலை மதிப்பிட ஒருவரால் இயலக் கூரும். நிகலாய் தோப்ரோலியுபோவ்
  • திறமை என்பது உண்மை என்ற ஒர் உணர்வாகும்.

நிகலாய் தோப்ரோலியுபோவ்

  • ஒவ்வோர் உண்மையான திறமையும், முற்றிலும் நிகரற்ற ஏதோ ஒன்றாகும். நிகலாய் செர்னிசேவ்ஸ்கி

115