பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் εξ த. கோவேந்தனர்

மேன்மைக்காக அதைச் சீரமைக்கும் செம்மாந்த மார்க்சின் கோர்க்கியின் சிந்தனைகளும் உண்டு; மனிதர்கள் நல்லவர்களாக வளர்வதற்கும் மனத் தூய்மையுடன் வாழ்வதற்கும் துணைபுரியும் பேரன்புப் பிணைப்பை அங்கிங்கெனாதபடி அனைவரிடத்தும் தோற்றுவித்துத் தோழமையுடன் வாழ வற்புறுத்திடும் இலியோ தோல்கதாய் எண்ணங்களும் உண்டு. மாந்த இனத்தின் வளரும் குறிக்கோள்களுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் சுறுசுறுப்பாகப் போராடும் கிளர்ச்சி செய்யும் உந்தாற்றலான உயரிய விருப்பாற்றல் களும், கலையின் வாழ்வு மாந்த இனத்தின் வாழ்வுடன் இணைந்து பிணைந்து நிற்கிறது என்ற பேருண்மையும், நாம் அனைவரும் உலகத்தின் முன் ஒன்றிணைந்த மக்களாவோம் என்ற பூங்குன்றனின் வாழ்வுண்மையும் புத்துயிர்ப்புடைய சிந்தனைச் செம்மலர்களாக பல்வேறு அறிஞர்களின் மொழிகளில் நூலில் மனப்பதை நுகர்வீர்களாக.

அன்பன்,

த. கோவேந்தன்

10