பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தன்

  • மாபெரும் செயல்களையும், அவலங்களையும் தண் மறுப்பைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்வதையும், புகழற்ற துண்டுதல் களையும், அற்பமானவற்றையும் தனது ஏட்டினில் நூறாண்டு காலமாக ஆயிரமாண்டு காலமாகப்பதிவுசெய்துகொண்டு வருவது தான் இலக்கியமாகும். எம்.இ. சால்டிகோவ் செசட்ரின்
  • தனது குற்றம் முன்னமே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதால், அதன் பொருட்டுக் கேலியும் கண்டனமும் ஒலிக்கத் தொடங்கிவிட்டன என்பதை அறிந்திருப்பதைவிடக் குற்றம் புரிவதைக் குறைப்பது வேறெதுவுமில்லை. எம்.இ. சால்டிகோவ் செசட்ரின்
  • எள்ளல் உண்மையானதாயிருக்க, அதனுடைய நோக்கத்தை அது எட்ட வேண்டுமெனின், முதலாவதாக அதன் ஆசிரியருடைய கருத்தைப் படிப்பவர் உணர அனுமதிப்பதும், அருத்ததாகத் தம் கணைகளை எதனை நோக்கிச் செலுத்துகிறோம். என்பதனைப் பற்றி முழுமையாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்வதும் இன்றியமையாதவையாகும். எம்.இ. சால்டிகோவ் செசட்ரின்
  • ஐரோப்பாவில் நிலவிய அறியாமை, மதத் தீவிரவாதமென்னும் பெருந்தீயை அணைக்க எள்ளல் என்னும் கருவியை வால்டேர் பயன்படுத்திக் கொண்டார். விசாரியோன் பெலின்ஸ்கி
  • வாழ்க்கை எவ்வாறிருந்தபோதும், ஒழுக்க நெறியாளர்களின் கட்டுக் கதைகள், சொற்பொழிவுகள் அனைத்தையும்விட அது அதிகமானவற்றை நமக்குச்சொல்லவும் கற்பிக்கவும் செய்வதால், கலையெண்பது வாழ்க்கையை அது உள்ளபடியே எடுத்துக் காட்டுவதாக இருக்கவேண்டுமென நாம் வலியுறுத்த வேண்டும். விசாரியோன் பெலின்ஸ்கி
  • வாழ்க்கையின் இருண்ட பகுதிகளை மறைத்துவிட்டு, ஆறுதலளிப்ப வற்றை மட்டும் காட்டவேண்டி வாழ்க்கையின் சுவர்களுக்கு வெள்ளை யடித்து அழகுபடுத்துபவர்கள் இழிவானவர்களைத் தவிர வேறெ வரும்ருக்க இயலாது. விசாரியோன் பெலின்ஸ்கி

121