பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

ஒட்டுண்ணியாக இல்லாமல் இருப்பதும் அடங்கியதாகும்.

வாசிலி சுகோம்லின்ஸ்கி

  • தண்மான உணர்வு அற்றவர் எந்த விதமான அடையாளமும் அற்றவரே. தண்மான உணர்வு என்பதுபூமியைச் சுழலச் செய்யும் ஆர்க்மெடிசின் அச்சு போன்றது. இவான் டர்கனேவ்
  • தன்னைத் தானே நேசிப்பதென்பது தற்கொலைக்கு ஒப்பாகும். தண் உணர்வு மிக்கவண் ஒரு தனியான, பயனற்ற மரம் போன்ற வண். ஆனால் நிறைவுக்குப் பாரு பரும் செயல்பாடு நிறைந்த தண்மானம் என்பதோ, மாபெரும் நிலைக்கு வழிகோலுவதாகும்.

இவான் டர்கனேஸ்

  • வெளி உலகிற்கும், நமது உள்ளுணர்வுகளுக்குமிடையேயான போராட்டம் பெரிதாக உள்ளபோது, நின்று உண்னையே நீ கேட்டுக் கொள். என்னிடமே சிலவற்றை நான் ஒப்புக் கொள்ள வெட்கப்படுவேனானால், நான் என்னவாக இருக்க இயலும்?

நிகலாய் ஒஸ்ட்ரோவ்ஸ்கி * மற்றவரின் மனிதப் பெருமையை மக்கள் இழிவுபடுத்துவது, மனித இனத்துக்கே ஒரு இழுக்காகும்; தங்கள் சொந்தப் பெருமையை அவர் மதிக்கவில்லையெனில், அதனால் விளையும் இழுக்கும், தீங்கும் இரு மடங்காகும். விசாரியோன் பெலின்ஸ்கி

  • வெட்கமற்ற தற்பெருமைக்காரன் வெறுக்கத்தக்கவன்ே; ஆனாலும்,

தன்மான உணர்வோ அல்லது வலிமை பற்றிய உணர்வோ அற்ற ஒருவனும் அதனிலும் குறைவாக வெறுக்கத் தக்கவனல்ல.

p. விசாரியோன் பெலின்ஸ்கி

  • வேடிக்கைக்கேனும், பொய்யுரைத்து எவரையும் பாராட்டி மயக் காதே. நீ எவ்வாறு இருக்கவேண்டுமென அவர்கள் எப்படி வேண்டு மானாலும் விரும்பிநினைத்துக்கொள்ளப்ரும், ஆனால் நீநீயாகவே இரு. விசாரியோன் பெலின்ஸ்கி

128