பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தன்

ஆகும். எங்கு உண்மை எண்பது இல்லாமல் இருக்கிறதோ, அங்குக் கலையெண்பதும் கூட இல்லாமல் போகும்.

மைக்கேல் கால்னின்

  • எவ்வளவு கசப்பானதாக இருந்தபோதும், உண்மையைப் படிப்ப வரின் முகத்திற்கெதிரே நேரடியாகச் சொல்ல இயன்றவராக எழுத்தாளர் இருக்க வேண்டும். அதனால்தான், ஒவ்வொரு கலைப் படைப்பையும் மதிப்பிடும்போது, முதலில் அதன் உண்மை நிறைந்த தன்மை, ஏற்றுக் கொள்ள இயன்ற தண்மை என்ற

நிலையிலிருந்து நாம் அதனை அணுக வேண்டும்.

மைக்கேல் சோலோகோவ்

  • எந்தக் கலையுமே உண்மை என்பதன்றி நிலைத்திருக்க இயலாது. மைக்கேல் கிளிங்கா
  • திறமையின் ஆற்றல் என்பது உண்மையில் இருப்பதாகும், ஒரு தவறான நடைமுறை, வலிமை மிகுந்த திறமைகளை அழித்து விரும். நிகலாய் செர்னசேவ்ஸ்கி
  • ஒரு கலைஞன் உண்மையைக் காண மறுத்து மறுபுறம் திரும்பிய அந்தக் கணமே, அவன் உடனடியாக வெறுமையானவனாக ஆகிவிடுவதுடன், அந்த நிமியத்திலேயே அவனது அனைத்துத் திறமைகளையும் இழந்துவிடுபவனாக ஆகிவிடுகிறான்.

பியோடர் தோஸ்தோயெவ்ஸ்கி * எழுதும் அல்லது பேசும் கலைகளில் போலியானவற்றைவிட அருவருக்கத் தகுந்தது வேறெதுவுமில்லை. நீ என்ன எழுது கிறாயோ அது உண்மையானதாக இருக்க வேண்டும்.

அலிகர் நவோவ்

  • கலைஞண் உண்மை நிறைந்தவனாக இருந்து, தனது கதை மாந்தரை உண்மையான வாழ்க்கையிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் உண்மையாக இருப்பதைக் கற்பனை

யாக மாற்றிக் காட்டும் எழுத்தாளன் பொய்யனே.

ஏ.வி. லுனாச்ர்ஸ்கி

136