பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

  • இன்னமும் சிறந்த ஏதோவொன்றில் நாண் கொண்டிருந்த நம்பிக் கையின் ஆற்றலாக நான் முன்னேற்றப் பாதையில் செலுத்தப் படும்போது, அதற்கான பாதையினை எனது ஐயங்களால் தெளிவானதாக்கிக் கொள்கிறேன். எம்.எம். பிரிஉ&விண்
  • கலைநயம் நிறைந்த உண்மை என்பது, தனக்காகத் தானே பேசு வதாக இருக்க வேண்டுமேயன்றி, திறனாய்வுகள், விளக்கங்கள் ஆகியவற்றின் உதவியுடன் பேசுவதாக இருக்கக் கூடாது.

எம்.இ. சால்டிகோ செசட்ரின்

  • நிறைவு பெற்றதும், முழுமையானதுமான கலை என்பது இயற் கையின் உயிரற்ற நகலாக இருப்பதன்று; எந்தக் கலையும்

உள்ளுயிர், மனித ஆர்வத்தின் ஒரு படைப்பாக இருப்பதாகும்.

பி.பி. சிஸ்டயகோவ்

  • வரலாற்றிலிருந்தோ வாழ்க்கையிலிருந்தோ ஒரு காட்சியை எழுது வது எண்பதுவே அனைத்துமாக இருப்பதில்லை. அது ஆசிரியரின் மெய்யியல் தேட்டத்தினால் ஒளியூட்டப்படாவிட்டால், வாழ்க்கை யின் ஆழ்ந்த கருத்தை எந்த வடிவத்திலேயாவது, அது எத்தகை யதாக இருப்பினும், கொண்டு செல்லாதவரை அது ஒரு பொது

வான புகைப்படமாக, ஒர் ஆய்வாகவே இருக்கும்.

இலியா ரெயின்

  • மிகப் பழமையான மனப்பாண்மை கொண்ட மக்களே கதை என்பது

உண்மை நிலைக்கு எதிரானதாகும் என நினைக்கின்றனர். - காண்ஸ்டாண்டின் பாஸ்டோவ்ஸ்கி * ஒரு கதையை உருவாக்குவது கண்டுபிடிப்பல்ல, ஆனால் உண்மை நிலையே. என்றாலும் ஒரு கண்டுபிடிப்பு என்பது உண்மை நிலையைவிட அதிகப்படியான உண்மையாக இருப்பதாகும்.

மைக்கேல் ஸ்பெட்லோவ்

  • உண்மையைவிட அழகு நிறைந்தது, ஆற்றல் மிக்கது எது ஒன்றி

னையும் ஒர் எழுத்தாளர் எப்போதும் கண்டுபிடிக்க இயலாது.

யூரி டினியானோவ்

139