பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தனர்

உருசிய இலக்கியம் மிகுந்த வலிமை கொண்ட மக்களாட்சியை வலியுறுத்துவதாகும்; சமுக அமைப்பின் பாடுகளைத் தீர்க்கும் தணியாத விருப்பத்தில், மனித நேயத்தை வேண்டும் அதன் கோரிக்கையில், எளிய மக்களின் வாழ்வில் கொண்டுள்ள ஆழ்ந்த அக்கறையில், பெண்களைத் துய்மையுடையவர்களாக நடத்து வதில், அனைத்துலக அனைத்தையும் ஒளிரச்செய்யும் உண்மைக் கான தேடுதலைத் தொடர்வதில் அது வலிமை மிக்கதாக உள்ளது. மாக்சிம் கோர்கி
  • இலக்கியம் என்பது சமுகப்பிரிவுகளின், குழுக்களின் கோட்பாடு கள், உணர்வுகள், கருத்துகள், நோக்கங்கள், நம்பிக்கைகள் ஆகிய வற்றை, கற்பனையுடன் வெளிப்படுத்துவதாகும்.

மாக்சிம் கோர்கி

  • ஒர் எளிமையான பொதுவான உண்மையை எடு த்துக் கொண்டு, அதன் ஆழ்ந்த இன்றியமையாத சமுகத் தண்மையையும், வாழ்க் கையின் அடிப்படைகள், அதன் பொதுவான சூழ்நிலைகளை அதிகமாகச் சார்ந்திருப்பதையும் எடுத்துக் காட்டுவதிலிருந்து உண்மையான கலையின் ஆற்றல் பெறப்படுகின்றது.

மாக்சிம் கோர்கி

  • கலை, உண்மையான நடைமுறை ஆகியவற்றினிடையே யான நெருங்கிய தொடர்பு, அந்தக் காலத்தின் வாழ்க்கையில் இலக்கியத்தின் செயல்பாடு நிறைந்த ஈடுபாடு ஆகியவை தற்

போது ஒரு முதன்மையான தேவையாக ஆகிவிட்டது. - மாக்சிம் கோர்கி * கலையெண்பது ஒழுக்க நெறியுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள தாகும். அலெக்சாண்டர் ப்ளோக்

  • இலக்கியமென்பது அன்றாட உணவு போன்றதாக இருக்க வேண்டும். அலெக்சாண்டர் ப்ளோக்
  • அந்தந்தக் காலங்களின் ஒட்டத்தினுடன் நடைபோட உண்னால்

இயலாவிட்டால், உன்னால் எழுதவும் இயலாது.

- அலெக்சாண்டர் ப்ளோக்

145