பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் * த. கோவேந்தனர்

தங்களது தெளிவற்ற உணர்ச்சிகளைச் சொற்களிலும் சிந்தனை களிலும் வடிக்கும் போது, தங்களை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்பருத்தி வைத்துக் கொள்ள மக்களை ஒப்புக் கொள்ளச் செய்ய வேண்டும். மாக்சிம் கோர்கி

  • எழுத்தாளனைப் பொறுத்தவரை, வடிவம் என்பது உள்ளடக்கத் திலிருந்து பிரிக்க இயலாதபடி அதனுடன் தொடர்புபடுத்தப்பட்ட துடன், அதனால் புரிந்து கொள்ளவும் முடிந்தது. இவான் புனின்
  • தொழில்நுட்பப்படி மெருகேற்றுதல் என்னும் படைப்பு முடிப்ப தென்பது எப்போதுமே அதனுள்ளேயே உள்ள மதிப்பாகக் காணப் பருவதில்லை. என்றாலும் இந்த மெருகேற்றி முடிப்பது என்பது கவிதையைப் படித்து இன்புறுவதற்கான தகுதி படைத்ததாக்கு கிறது. விளாடிமிர் மாயாகோவஸ்கி
  • நமது சொற்களை நாம் கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வோர் இயக்கத்தையும் தெளிவாகவும் சுருக்கமாகவும் எடுத்துக் காட்டும் பேச்சை நாம் கோர வேண்டும். அதனால் சொற்கள் இப்போது ஒரு குண்டினைப் போல் வெடிக்க வேண்டும், ஒரு புண்ணைப் போன்ற வலியையும் அளித்து, வெற்றி பெற்ற ஒரு பெருங்கச்சலைப் போன்று தற்போது எதிரொலிக்கவும் வேண்டும். விளாடிமிர் மாயாகோவஸ்கி
  • கலைத் திறன் பற்றிய கோட்பாடு என்பது வடிவத்தின் எல்லைக் கும் உள்ளடக்கம் என்ற எல்லைக்கும் சம அளவில் ஈடுபடுத்தப் பருகிறது. திமிட்ரி கோபலேவ்ஸ்கி
  • எந்த ஒரு கலையையும் போலவே, துண்பத்தையேற்றுப் படைப் பதும், விடாமுயற்சியும் இலக்கியத்திற்குத் தேவைப்படுபவை யாகும். வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், அதனுடைய தொழில்நுட்பத்தில் திறமை பெறுவது என்பது எண்ணம் தீட்டுவது

அல்லது இசைப்பதை விடக் கடினம் மிகுந்ததேயாகும்.

இவான் துர்கனேவ்

156