பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தண்

  • எழுத்தாளரின் கலை, முடிவில் அவரது நடையினால் மதிப்பிடப் பருகிறது. ஏனெனில் நடையெண்பது மொழியின் முதன்மையான தாகும். காண்ஸ்டாண்டின் பெடின்
  • துல்லியமாகச் சொற்களைப் பயன்படுத்துவது என்பது நல்ல நடைக்கும், சுவைக்கும் மட்டுமேயான ஒரு தேவையல்ல; ஆனால் அறிவின் தேவைகளில் அது முதன்மையானதாகும்.

காண்ஸ்டாண்டின் பெடின்

  • எழுதுவது என்பதின் கலை எழுதுவதில் அடங்கி இருப்பதில்லை, ஆனால் மட்டமாக எழுதப்பட்டவற்றை நீக்கிவிடுவதில்தான் கலை உள்ளது. ஆண்டன் செகர்வ்
  • நன்கு எழுதும் கலையெண்பது தேவையற்றதை நீக்கும் கலையு மாகும். ஆண்டன் செகாவ்
  • சுருக்கம் என்பது திறமையின் உடன்பிறந்தவளாகும்.

ஆண்டன் செகாவ் * எழுத்தாளரின் மாபெரும் திறமையெண்பது தேவையற்றதை நீக்கும், நுண்ணிய திறமைதான். பியோடர் தோஸ்தோயெவ்ஸ்கி

  • குழப்பமாகத் தெளிவற்று எழுதுபவர்கள் ஒன்று தங்களது அறி யாமையினைத் தாங்களே விரும்பி வெளிப்படுத்திக் கொள் கின்றனர், அல்லது அதனைப் பயனற்ற முறையில் மறைத்துக் கொள்ள முயலுகின்றனர். குழப்பமாக எழுதுபவர்கள் தங்களுக்குக்

குழப்பமாகக் காணப்படுபவை பற்றி எழுதுகின்றனர்.

மைக்கேல் லோமானசோவ்

  • அறிவற்றது எண்பதில் இரண்டு வகை உள்ளது. ஒன்று, சொற்களுக் கேற்ற உணர்வுகளும் சிந்தனைகளும் அற்று இருப்பதனால் விளைவ தாகும். மற்றொன்று அதிகப்படியான உணர்வுகளும் சிந்தனைகளும் பெற்றிருந்து அவற்றை வெளிப்படுத்தப் போதிய சொற்களற்று இருப்பதனால் விளைவதாகும். அலெக்சாண்டர் பூஉடிகின்

157